சேலம், பிப். 17- சேலம் உருக்காலை, நாட்டுப்புற கலை மற்றும் கலாச்சாரத்தினை ஊக்கு விக்கும் வண்ணம் சுற்றுப் புற பள்ளிகளுக்கிடையே யான கலாச்சாரப் போட்டி களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான போட் டிகள் மோகன் நகர், ஸ்டெ யின்லஸ் கலாச்சார மையத் தில் புதனன்று நடைபெற் றது. இதில் நிர்வாக இயக் குனர் எஸ். சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற் றினார். இப்போட்டிகளில், எம்ஜிஆர் நகர், தாரமங்க லம், லட்சுமாயூர், சின்ன பூசாலியூர், இலகுவம் பட்டி, நாயக்கன்பட்டி, இளம்பிள்ளை, சிவதா புரம், சர்க்கார் கொல்லப் பட்டி போன்ற கிராமங்க ளில் உள்ள 19 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி கள் பங்கேற்றனர். இதில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி கள் மற்றும் ஓவியம், பேச்சு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக, இந்நிகழ்ச் சியை சேலம் உருக்காலை யின் பொது மேலாளர் விஸ்வநாதன் மற்றும் எஸ். கே. கரே, என். தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்து துவக்கி வைத்தனர். 4 குழந்தைகளுடன் 9 கொத்தடிமைகள் மீட்பு கிருஷ்ணகிரி, பிப்.17- கிருஷ்ணகிரி அருகே செங்கல் சூளையில் கொத் தடிமைகளாக இருந்து வேலை செய்த 9 பேருடன் அவர்களது 4 குழந்தை களையும் வருவாய் துறை யினர் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட் டம் வேப்பனஹள்ளி அரு கில் உள்ளது பாலனப் பள்ளி. இங்கு நாகராஜ் என் பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. அதில் கொத்தடிமைக ளாக சிலரை தங்க வைத்து வேலை செய்விப்பதாக தொண்டு நிறுவனம் ஒன்று கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சதீஷ், வருவாய் ஆய்வாளர் சந் திரமௌலி, கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் உள் ளிட்ட வருவாய் துறையி னர் செங்கல் சூளைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது தருமபுரி மாவட்டம் பாலக் கோடு அருகே பஞ்சப் பள்ளி புளியம்தோப்பு பகு தியை சேர்ந்த மாரப்பன் (27) இவரது மனைவி சரசு (26), மகள் தனலட்சுமி (7), மகன்கள் சூர்யா (6), பிரபு (4), சரசுவின் தங்கை ஆனந்தி (14), வீரபத்திரன் (22), இவரது மனைவி மாதம்மாள் (19), சொக்கன் (45), பைரம்மாள் (35), மகன்கள் மாதேஷ் (15), சிவா (9), கோவிந்தராஜ் (48) அகிய 13 பேரையும் மீட் டனர். அரசின் மூலம் கொத் தடிமை மறுவாழ்வு நிதியுதவி வழங்க நடவ டிக்கை எடுப்பதாக கோட் டாட்சியர் தெரிவித்தார். உடனடி உதவியாக ஆயி ரம் ரூபாய் வீதம் 9 நபர் களுக்கு வழங்கப்பட்டது. அணையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு கோவை, பிப். 17- கோவை மலுமிச்சம் பட்டி அரசுப் பள்ளி மாண வர்கள் முருகவேல் (16), கார்த்திக்(16) இருவரும் தமது நண்பர்களுடன் மயிலேறிபாளையம் பகுதி யிலுள்ள தடுப்பணைக்கு குளிக்கச் சென்றனர். அப் போது அங்கு சேற்றுக்குழிக் கள் சிக்கிய கார்த்திக்கை காப்பாற்ற முயன்ற முருக வேலும் சேற்றில் சிக்கி மூழ்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட் புப் படை போலீசார் நீரில் மூழ்கிய மாணவர்களின் சடலங்களை மீட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: