சீனாவை எதிர்ப்பதற்காக அமெ.வுடன் பேசவில்லை: ஏ.கே.அந்தோணி புதுதில்லி, பிப்.17- அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்டு இருக்கும் உறவு சீனாவை எதிர்ப்பதற்காக அமைந்தது அல்ல என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந் தோணி திட்டவட்டமாகத் தெரிவித்தார். தலைநகர் தில்லியில் ஏ. கே.அந்தோணி வெள்ளிக் கிழமை செய்தியாளர்க ளிடம் பேசுகையில், எங்க ளது படைப் பிரிவுகளை நவீன மற்றும் கூட்டு கரு விகளால் மேம்படுத்தி வரு கிறோம். இந்த மேம்பாடு எந்த நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படுவது இல்லை. நாட்டின் நிர்வா கப் பகுதி ஒற்றுமையை பாதுகாக்கவே படைப் பிரிவு மேம்படுத்தப்படு கிறது என்றார். சீனாவைக் கருத்தில் கொண்டே இந்தியாவுடன் அமெரிக்கா செயலாற்று கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த நாட் டையும் எதிர்ப்பது இந்தி யாவின் எண்ணம் இல்லை என்றார். சமீப ஆண்டுக ளாக மேற்கத்திய ஊடகங் களில் இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ உறவு வலுப்பட்டு வருகிறது. சீனா ஆயுதப் படைத்திறனை அதிகரித்து வருவதை எண் ணியே இந்த உறவு வலுப் பெற்று உள்ளது என கூறு கின்றன.இத்தகைய நிகழ் வை அந்தோணி ஏற்க வில்லை. கடந்த 5-6 ஆண்டுகளாக அமெரிக்காவிடம் இந்தியா அதிக அளவில் ஆயுதங் களை வாங்கி வருகிறது. இந்த கால கட்டத்தில் கண் காணிப்பு விமானங்கள் உள்பட ராணுவ ஆயுதங் களை 80 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு அந்த நாட் டிடம் வாங்கியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: