சீனாவின் தங்க வேட்டை 2012ஆம் ஆண்டில் உலகத் தங்கச் சந்தையில் சீனா முத லிடத்தைப் பிடிக்குமென்று உல கத் தங்கக் கவுன்சில் (றுடிசடன ழுடிடன ஊடிரnஉடை) அறிக்கை தெரிவித்துள்ளது. தங்க நகைகள் மற்றும் தங்க முதலீடுகளுக்கான சீனாவின் சந்தை அண்மையில் 50 சத வீதத்திற்கு மேல் அதிகரித்துள் ளது. 2011ல் இந்தியா 933 டன் களோடு தங்கச் சந்தையில் முத லிடத்திலும், 770 டன்களோடு சீனா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. தற்போது 50 சத வீத அதிகரிப்பு இருப்பதால் முத லிடத்திற்கு சீனா வருகிறது. உல கத்தின் மொத்த தங்கச் சந்தை மதிப்பு 4067டன்கள் ஆகும். உலகத் தங்க நகைச் சந்தை யில் இந்தியாவும், சீனாவும் சேர்ந்து 55 சதவீதத்தைக் கை களில் வைத்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: