சிரியா போராட்டக்காரர்கள் பகுதியில் ராணுவம் குண்டுமழை டமாஸ்கஸ், பிப். 17- சிரியா அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கும் பகுதியில் சிரியா ராணுவத்தினர் வெள்ளிக்கிழமையன்று கடுமையான குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களின் மையப்பகுதி யான கால்டியஷ், பயாட்ஸ் பகுதிகளில் ராக்கெட்டுகள் தொடர்ந்து வீசப்பட்டன. கடந்த 14 நாட்களில் மிக மோசமான தாக்குதலாக இது இருந்தது. இது போன்ற வன்முறையை நாங்கள் பார்த்தது இல்லை என சிரியாபுரட்சியின் பொது எதிர்ப்புக் குழு வைச் சேர்ந்த ஹடி அப்துல்லா தெரிவித்தார். இந்தத் தாக்குதலைத் தவிர, பாபா அமர், இன்ஷாட் ஆகிய மாவட்டங்களிலும் குண்டுகள் தொடர்ந்து விழுந்தன. போராட்டக்காரர்கள் பகுதியில் உள்ள வீடுகளின் மேல் ராணுவத்தின் விமா னங்களும், ஹெலிகாப்டர்களும் கணக் கிட முடியாத அளவு பறந்தன. போராட் டக்காரர்கள் பகுதியில் ராணுவத் தாக்குதல் நடைபெறுவதை ஒரு தொலைக்காட்சி வீடியோ காட்டியது. அதில்,அந்த பகுதி யில் உள்ள வீட்டை நோக்கி ராணுவ பீரங்கி கடுமையாக சுட்டது. சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்ற அரபு, முயற்சியை ஐக்கிய நாடுகள் சபை ஆதரித்து இருப்பதை போராட்டக்காரர்கள் வரவேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.