சிபிஎம் மாநில மாநாடு சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுஜோதி புறப்பட்டது கோவை, பிப். 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநில மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகி றது. இம்மாநாட்டை நோக்கி கோவை சின் னியம்பாளையம் தியாகிகளின் நினைவு ஜோதி பயணம் தியாகிகளின் நினைவிடத் திலிருந்து உணர்ச்சிமிகு முழக்கங்களி டையே துவங்கியது. சின்னியம்பாளையம் தியாகிகள் நினை விடத்தில் வெள்ளியன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை வகித்தார். உணர்ச்சிமிகு முழக்கங்களிடையே தியாகிகளின் நினைவு ஜோதியினை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் எம்.எல்.ஏ எடுத்துத்தர, பயணக்குழுத் தலைவர் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. பத்ம நாபன் பெற்றுக்கொண்டார். கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எம்.பி., கே.சி. கருணாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி ஆகியோர் தியாகிகளை நினைவு கூர்ந்தும் பயணக் குழுவை வாழ்த்தியும் உரையாற்றினர். வரவேற்பு பின்னர் ஜோதிப் பயணக்குழுவிற்கு சின்னியம்பாளையம், அத்திக்குட்டை, ஹோப்காலேஜ், ஆவாரம்பாளையம், கண பதி பஸ்நிலையம், அண்ணாநகர், காந்தி புரத்தில் திருவள்ளுவர் பஸ்நிலையம், செல் வபுரம் சிவாலயா தியேட்டர் முன்பும், உக்க டம், போத்தனூர், வெள்ளலூர், சிங்காநல் லூர் மற்றும் சூலூர் பஸ்நிலையம் உள்ளிட்ட 13 மையங்களில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. செம்படை அணிவகுப்புடனும், செங் கொடிகளை ஏந்தியவாறே வரிசையாக நின்று வீரமுழக்கம் எழுப்பியும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் பய ணக்குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் கோவை எஸ்.எஸ்.குளம், சூலூர், சிங்காநல்லூர், வடக்கு நகரம், கிழக்கு நகரம், மேற்கு, பேரூர் நகரக்குழுக்கள், தெற்கு தாலுகாக்குழு சார்பில் அந்தந்த மையங்களில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. துவக்க நிகழ்ச்சி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் யு.கே. சிவஞானம், எஸ்.கருப்பையா, எஸ்.ஆறுமுகம், கே. மனோகரன், வி.பெரு மாள், எஸ்.புனிதா, என். ஜெயபாலன் ஆகி யோரும், இடைக்குழுச் செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன் னணி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். பயணக்குழுவில் சி.பத்மநாபன், எஸ். கிருஷ்ணமூர்த்தி, என்.வி. தாமோதரன், இ.வி. வீரமணி (கோவை), ப.கு. சத்திய மூர்த்தி, ஒய். அன்பு (திருப்பூர்), என். பாலசுப் பிரமணி (ஈரோடு) ஆகியோர் இடம் பெற் றுள்ளனர். பயணக்குழு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக நாகை மாவட்டத்தில் மாநாட்டுத் திடலை சென்று சேரும். இக்குழுவின ருடன் பயண நெடுகிலும் உடுமலை துரை யரசனின் இசைக்குழு செல்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.