கோவை, பிப். 17- சட்டவிரோத பாடல் பதிவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்தார். தமிழக போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையைத் தொடர்ந்து கோவையில் 9 வழக்குகளும், சேலத்தில் 2 வழக்குகளும், வேலூரில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.