அம்பத்தூர், பிப். 17 – அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ளது யூனி டெக் ஏற்றுமதி ஆடை நிறு வனம். இந்நிறுவனத்தில் 120 பெண்கள் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக பணி புரிந்து வருகிறார்கள். கடந்த 4 மாதங்களாக இந்நிறுவனம் தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்க வில்லை. இந்நிலையில் திடீ ரென அறிவிப்பின்றி சட்ட விரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. மேலும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்வாகம் முன்வர வில்லை. தொழிலாளர்கள் தொழி லாளர் நலத்துறை ஆணை யத்திடம் முறை யிட்டும் எந்தத் தீர்வும் எட்டப்பட வில்லை. நிறுவனத்தின் சட்ட விரோத கதவடைப்பை ரத்து செய், தொழில் தகராறு சட்டத்தின் கீழ் பேச்சு வார்த்தை முடியும் வரை தொழிலாளர்களுக்கு சம்ப ளம் வழங்கு, அனைத்து தொழிலாளர்களின் பி.எப். பணத்தை உடனடியாக கட்டு, ராஜினாமா செய்த தொழி லாளர்களுக்கு சேர வேண் டிய பணத்தை உடனே வழங்கு, தமிழக அரசு உடன டியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு பகுதி செயலாளர் சு.பால்சாமி, ஏஐடியுசி மாநில செயலாளர் டி.எம்.மூர்த்தி, ஜி.காசிராஜன், மதிமுக தொழிற்சங்க மாநில செய லாளர் அந்திரிதாஸ், திமுக தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.செல் வராஜ், ஏஐயுடியுசி வி.சிவக் குமார், ஏஐசிசிடியு எஸ். சேகர் உள்ளிட்டோர் பேசி னர்.

Leave A Reply

%d bloggers like this: