உடுமலை,பிப். 17- உடுமலை பகுதியில் சங்கம் அமைத்த தொழிலா ளர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு மிரட்டி வரும் பன்னாட்டு நிறுவ னத்தை கண்டித்து தொழி லாளர்கள் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர். உடுமலை அருகிலுள்ள எளையமுத்தூர் பகுதியில் தாய்கோழி வளர்ப்பில் எவியஜென் என்னும் பன் னாட்டு நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிறுவ னத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியாற்றி வருகின்ற னர். ஆனால், இந்நிறுவ னத்தில் தொழிலாளர் களுக்கு தேவையான எத் தகைய அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும், இங்கு பணியாற்றும் தொழி லாளர்களுக்கு மிகக்குறை வான ஊதியமே அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலை யில் பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள் ஒன்றுகூடி சிஐ டியு தலைமையில் சங்கம் அமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பன் னாட்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், அங்கு பணி யாற்றும் தொழிற்சங்கத் தினரை மிரட்டி, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. பன்னாட்டு நிறுவனத் தின் இப்போக்கினை கண் டித்து சிஐடியு தொழிற்சங் கத்தின் கிளைச் செயலாளர் குமரகுரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இதில் நிறுவனத்தில் பணி யாற்றும் தொழிலாளர் களை பணி நிரந்திரம் செய் திடல் வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திட வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு தொழிற்சங் கத்தின் மாநிலக்குழு உறுப் பினர் என்.கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா செய லாளர் சி.சுப்பிரமணியம் மற்றும் ரங்கநாதன், கனக ராஜ், ஜெகநாதன் ஆகியோர் நிர்வாகத்தை கண்டித்து உரையாற்றினர். இந்நிறு வனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: