‘குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்’ புதுதில்லி: இத்தாலிய வர்த்தகக் கப் பலின் ஆயுதக் காவலாளிகளின் துப்பாக் கிச்சூட்டில் இரண்டு மீனவர்கள் உயிரி ழந்தனர். சட்ட விதிமுறைகளை மீறிய குற்ற வாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார். இவவிஷயத்தை நாங்கள் தீவிரமான விஷயமாகக் கருதுகின்றோம். இச்சம்பவம் சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறிய தாகும். இவ்விஷயத்தில் குற்றம் புரிந்தவர் கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஏ.கே. அந்தோணி பத்திரிகையாளர்களிடம் தெரி வித்தார். இவ்விஷயத்தில் இந்தியா கடும் எச் சரிக்கையை விடுக்க விரும்புகிறது. இது இந் தியாவின் பிரச்சனை மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் பிரச்சனையாகும். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களி டம் கேரள காவல்துறையினரும் கடலோ ரப் பாதுகாப்புப் படையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று அவர் ஒரு கேள்விக்குப் பதிலளித்தார். எனவே, இது குறித்து தெரிவிப்பது முறையாகாது என்றும் அவர் தெரிவித்தார். இத்தாலிய வர்த்தகக் கப் பலைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய பாதுகாப் புப் படைவீரர் கள் துப்பாக்கியால் சுட்ட தில் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த இரு மீனவர்கள் உயிரிழந்தனர்.

Leave A Reply