காவல்துறை உதவி ஆய்வாளரின் நேர்மைக்கு பாராட்டு சிதம்பரம், பிப். 17- சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 15 ந் தேதி இரவு ஒரு வாலிபர் குடிபோதையில் மயங்கிய நிலையில் படுத்து இருந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு உதவி ஆய்வா ளர் அன்பழகன் அவரிடம் சோதனை செய்தபோது பேண்ட் பாக்கெட்டில் ரூ. 54 ஆயிரம் ரொக்கம் 5 பவுன் நகையும் இருந்தது. மேலும் அவரிடம் விசாரனை செய்தபோது அவர் கள்ளக்குறிச்சி வாக்கம் பாடியைச்சேர்ந்த வரதராஜ் என் றும் அந்த பணம் மயிலாடுதுறை பகுதியில் நெல் அறு வடை எந்திரம் மூலம் கிடைத்த வருவாய் என்றும் தெரியவந்தது. உரிய விசாரணை செய்து அவரது உறவி னரை வரவழைத்து மொத்த பணமும் நகையும் பாதுகாப் பாக ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளரை காவல் துறை ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் பாராட் டினர். மாணவர்களுக்கு தேர்வு குறித்து வழிகாட்டுதல் பயிற்சி ஓசூர்,பிப். 17- ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள் ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு குறித்த வழி காட்டுதல் பயிற்சி நடைபெற்றது. 2011ம் ஆம் ஆண்டில்நடந்த அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி கே. ரேகா தேர்வுக்கு பின்பற்ற வேண்டிய விதி முறைகள் போன்றவற்றை மாணவர்களுடன் கலந்துரை யாடினார். பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்வி களுக்கு பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வரும் நல்லாசிரி யர் விருதுபெற்றவருமான கே. சம்பத்குமார், பள்ளியின் ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர். பிஎம்சிடெக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி ஓசூர், பிப். 17- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோனேரிப் பள்ளி யில் உள்ள பெருமாள் மணி மேகலை பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியில் மூன்று நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்து. இந்தக் கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சிக்கு பிஎம்சிடெக் நிறுவனத்தின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். துணை முதல்வர் உமேஷா வரவேற்றார். செயலாளர் குமார், அறங்காவலர் பி. மலர், இயக்குநர் சுதாகரன், திட்ட இயக்குநர் சேதுராமன் ஆகியோர் பேசினர். ஓசூர் சாராட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

Leave A Reply