காவல்துறை ஆய்வாளருக்கு டிஜிபி பாராட்டு சென்னை: மாணவர்களின் கல்வீச்சுத் தாக்குதலிலிருந்து ஒரு வயதுக்குழந்தை யைப் பாதுகாப்பாக மீட்ட அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். அனந்த ராமனுக்கு டிஜிபி கே. ராமானுஜம் பாராட் டுத் தெரிவித்தார். பிப்ரவரி 10ம் தேதி பஸ் டே கொண் டாட முயன்ற மாணவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பச்சை யப்பா கல்லூரி வளாகத்திலிருந்து அங்கு வந்த பேருந்தின் மீது சரமாரியாகக் கற் களை வீசித் தாக்குதல் நடத்தினர். மாண வர்களின் கல்வீச்சில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்திலிருந்து தப்பிச் சென்று விட்டார். எனவே, பேருந்தினுள் இருந்த பயணிகள் மாணவர்களின் தாக்கு தலுக்கு உள்ளாகினர். இந்நிலையில் பயணிகளுக்குப்பாது காப்பளிப்பதற்காக காவல்துறையினர் கேடயங்களோடு பேருந்தின் இருவாயில் களையும் அரண்போல அணிவகுத்து நின்று பாதுகாப்பு அளித்தனர். பேருந் தினுள் சிக்கித்தவித்த ஒருவயதுக் குழந் தையை அரும்பாக்கம் காவல் நிலைய ஆய் வாளர் அனந்தராமன், டூவீலரில் வந்த ஒரு வரின் ஹெல்மட்டை இரவல் வாங்கி அணிந்து கொண்டு, அக்குழந்தைக்குக் காயம் ஏற்படாதவகையில் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வந்தார். ஆய்வாளரின் வீரச்செயலை டிஜிபி பாராட்டினார்.

Leave A Reply