அம்பத்தூர், பிப். 17 – அம்பத்தூரில் உள்ள அரசு காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவும், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியும் தலைமையாசி ரியர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச் சியில் பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசும், இலவச சைக்கிள்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வேதாச்சலம், மாமன்ற உறுப்பினர்கள் வி.அலெக்சாண் டர், குமாரி அரிகிருஷ்ணன், கேபிள் எம்.ஆர்.ஆறுமுகம், என்.அய்யனார், முகப்பேர் பாலன், எம்.பார்த்திபன், கே.பி. முகுந்தன், மைக்கேல்ராஜ், சிமியோன் பிரபு, மா.சண்முகம், ஏ.கே.டி.தனசேகரன், ராஜவேல், டி.குட்டி, எம்.சி.ராஜா சிவபாலன், கே.ஜி.மது, விஜயராகவன், கே.பாலசுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply