அம்பத்தூர், பிப். 17 – ஆவடி என்.எம். சாலையில் உள்ளது யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் மேலாளராக மல்லிகா பணிபுரிகிறார். இந்த நிறுவனத்தில் அன்றாடம் 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு தொகை வசூலாகும். காசோலையாக 20 லட்சம் ரூபாய் வரை வசூலாகும். வியாழக்கிழமை மாலை வழக்கம் போல் ஊழியர்கள் நிறுவனத்தை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் மேலாளர் மல்லிகா மற்றும் ஊழியர்கள் நிறுவனத்தை திறக்க வந்த போது நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த பணம் 1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மேலாளர் மல்லிகா அளித்த புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: