நாமக்கல், பிப். 17- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் மேலா ளரைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சார்பில் பெரிய மணலியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியில் இந்தி யன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையொன்று செயல் பட்டு வருகிறது. இக்கிளை யில் அப்பகுதியிலுள்ள விவசாயிகள், விசைத் தறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள் ளிட்டோர் வாடிக்கை யாளர்களாக உள்ளனர். இக்கிளையின் மேலா ளராக செயல்பட்டு வரும் பெரியசாமி என்பவர், மக ளிர் சுய உதவிக் குழுவினர் வங்கிக்கு வரும் போது ஒருமையில் பேசியும், முறையான பதில் அளிக் கமாலும் இருந்து வருகி றார். மேலும். கல்விக் கடன் கேட்டு வரும் மாணவர் கள் மற்றும் பெற்றோர் களிடம் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்துகிறார். தொழிற்கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர்க ளிடம் 10 சதவிகித லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கடன் தரமுடியும் என நிர்ப்பந்தித்து வருகிறார். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் வங்கியின் மேலாளரை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மேலும் வங்கியின் மேலாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதனன்று வங்கியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனையடுத்து வங்கி யின் மண்டல மேலாளர், காவல் துறையினர் முன் னிலையில் வாலிபர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இப் பேச்சுவார்த்தையில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ், எஸ்.செந்தில்குமார், வேலு, சுரேஷ் ஆகிய ஒன் றிய நிர்வாகிகளும், மாதர் சங்க மாவட்ட நிர்வாகி மாதவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வங்கி மேலாளர் மீண்டும் இத்தகைய நட வடிக்கைகள் தொடராது என உறுதிமொழியளித் ததையடுத்து ஆர்ப்பாட் டம் விலக்கிகொள்ளப் பட்டது.

Leave A Reply