ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான இயக்கம் ஆர்.சிங்காரவேலு ஐ.மு.கூட்டணி-2 அரசின் நாசகர பொருளாதார, தாராளமயக் கொள்கை களின் விளைவாக நாடு முழுவதும் 99 சத வீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப் பாக கருத்தாலும், கரத்தாலும் பாடுபடும் உழைப்பாளி மக்கள் மீது வரலாறு காணாத வகையில் பல தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இத்தகைய தாக் குதல்களை முறியடிக்க எதிர்தாக்குதல், உழைக்கும் வர்க்கப் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை நிறைவேற்றக்கூடிய வகையி லேயே, அங்கீகார தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் இணைந்து பிப் ரவரி 28ல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கான அறைகூவலை விடுத் துள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக, அனைத்துப்பகுதி மக்களையும் பாதிக் கக்கூடிய விலைவாசி உயர்வுக்கு எதிராக, தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்ட பொதுவேலைநிறுத்தம் 1982 ஜனவரி 19 வேலைநிறுத்தம். சிஐடியு முன்முயற்சி யால், தேசிய கிளர்ச்சி பிரச்சாரக்குழு (என்எல்சி) 1981-ல் ஏற்பட்டது. அதன் அறைகூவலே இந்த வேலைநிறுத்தம். திருமெய்ஞானத்தில் வேலைநிறுத்தத் தில் பங்கேற்ற விவசாயத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அஞ்சான், நாகூரான் தியாகிகளானார்கள். நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்ற பின், 1990 முதல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டு செல்வங்களையெல்லாம், பன் னாட்டுக் கம்பெனிகள் சூறையாடவும், வர லாறு காணாத லஞ்ச ஊழல் பெருகவும் இக்கொள்கை பயன்பட்டது. 1950-ல் அரசியல் சட்டம் நிறைவேற் றப்பட்டது. இதை உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய டாக்டர் அம்பேத்கார் அவர் கள். ‘ ஒரு மனிதன், ஒரு வாக்கு உள்ளது. ஆனால் ஒரு மனிதன், ஒரு மதிப்பு என்பது இல்லை. இந்த முரண்பாடு களை யப்படாவிடில் கலகம் வெடிக்கும், எனக் கூறினார். ரூ.5000 கோடி சொத்துக்கும் மேல் உள்ளோர் 55 பேர். 84 கோடி மக்கள், தினசரி ரூ.20 கூட செலவிட முடியாத தரித்திர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2.5 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பிப்ரவரி 28 பொதுவேலைநிறுத்தம், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான இயக்கம். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10000 வேண்டும், விலை உயர்வை ஈடு கட்ட பஞ்சப்படி வேண்டும். வருமானத் தின் உண்மை மதிப்பை பாதுகாத்திட, விலைகள் கட்டுக்குள் இருக்கவேண்டும். வேலைவாய்ப்புகளை பறிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகள் உழைப்பாளர் களின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்டது. வாழ்வுரிமை அடிப்படை உரிமை என அரசியல் சட்டம் கூறுகிறது. வாழ்வுரிமை என்றால் என்ன? மிருகங்களைப் போல அல்லது வெறும் ஐடப் பொருளாக மனி தன் இருக்க முடியாது. கௌரவமான வேலை வேண்டும்; கௌரவமான ஊதி யம் -சமூகப் பாதுகாப்பு வேண்டும். தொழி லாளி வர்க்கம் போராடிப் பெற்ற தொழி லாளர் சட்டங்களை கறாராக அமலாக்க வேண்டும்; அடிப்படை உரிமைகளான சங்கம் சேரும் உரிமை (ஐஎல்ஓ கோட் பாடு எண் 87), கூட்டு பேர உரிமை (ஐஎல்ஓ கோட்பாடு எண் 98) போன்ற வைகளை அரசு அங்கீகரிக்க வேண்டும்; அமலாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை அரசு வேடிக்கை பார்க் கக்கூடாது. அரசே விலை உயர்வுக்கு காரணமாக இருப்பது அறமன்று. பெட் ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு, யூரியா, கட்டுமானப் பொருட்கள், தொழிற் சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலைகளை கட்டுப் படுத்த அரசு முன்வர வேண்டும். நாட்டின் மிகப்பெரிய சொத்து மனித வளமும், இயற்கை வளமுமே ஆகும். சாமா னிய மனிதனின் முகத்தில் மகிழ்ச்சி இருக்க வேண்டும். ரிலையன்ஸ், டாடா, மிட்டல் போன்ற இந்நாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதே அரசின் பணியாக உள்ளது. இந்நிலையை மாற் றிடவே பிப்ரவரி 28 பொதுவேலைநிறுத்தம். ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் உபரியாக, இருப்புநிதியாக மத்திய பொதுத்துறை நிறு வனங்களிடம் உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, ஊட்டி போட்டோ பிலிம் போன்ற நலிவுற்ற பொதுத்துறைகளை புனரமைக்க முடியும். க்ஷழநுடு, ளுஹஐடு, சூகூஞஊ போன்ற நிறுவனங்களை மேலும் நவீன மயமாக்க முடியும்; பொதுத்துறைகளை விரிவாக்கம் செய்யவும் முடியும். ஏதோ, லாபகரமாக இயங்கும் பொதுத்துறை பங்குகளை விற்றுத்தான், நலிவுற்ற நிறு வனங்களை புனரமைக்க முடியும் என்ப தல்ல. பங்கு விற்பனை, சென்னை, தூத் துக்குடி போன்ற பிரதான துறைமுகங் களை கார்ப்பரேட் நிறுவனமயமாக்க முயற்சிப்பது என்பதெல்லாம் தனியார்மய நடவடிக்கைகளே. சுயசார்பு பொருளா தாரம் காத்திட, முறையாக அரசுக்கு வரி கள், வட்டிகள், லாபப்பங்கீடு, டிவி டெண்டுகள் போன்றவைகளை செலுத்தி வரும் பொதுத்துறைகளை காத்திட பிப்ர வரி 28 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும். உதாரணமாக, முன்மாதிரி நிர்வாகமாக அரசுத் துறையே செயல்படுவதில்லை. காண்ட்ராக்ட், கொத்தடிமை முறை மத்திய, மாநில பொதுத்துறைகளில் பரவ லாக உள்ளது. நெய்வேலியில் 13000 காண்ட்ராக்ட் தொழிலாளர், ஐஓசி, பிபிசி, ஓஎன்ஜிசி ஆகிய பெட்ரோலிய நிறுவனங்களில் உள்ள காண்ட்ராக்ட் தொழிலாளர்கள், பணிநிரந்தரம் என்ற நிலையை அடையாமலேயே ஓய்வு பெறு கின்றனர். தனியார் பஞ்சாலைகளில், சுமங்கலி திருமண திட்டத்தின்கீழ் இளம் பெண்கள் கடும் உழைப்புச் சுரண்ட லுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சர வணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், தனியார் சூப்பர் பஜார்களில் 12 மணிநேர வேலை, குறைவான கூலி, எவ்வித சமூக பாது காப்புமின்மை போன்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய தார்மீக பலம் அரசுக்கு கிடையாது. கடந்த கால தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் மூலம் பெற்ற தொழிலாளர் சட்டங்கள் சரிவர அமலாவதில்லை. அமலாக்கும் அரசுத் துறையே பலகீனமாக உள்ளது. ஹுண்டாய், பாக்ஸ்கான், காம்ஸ் டார் போன்ற பன்னாட்டு கம் பெனிகளில் சங்கம் அமைக்கும் உரி மையை நிலை நாட்டவே தொழிலாளர்கள் தொடர்ச்சியாக எண்ணற்ற போராட் டங்களை நடத்த வேண்டிய நிலை உள்ளது. நாடு முழுவதும் உள்ள 47 கோடி முறைசாராத் தொழிலாளர்க்கும், 24 கோடி விவசாயத் தொழிலாளர்க்கும் சேர்த்து ஒரே சட்டமாக, முறைசாராத் தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டம் 2008ல் நிறை வேற்றப்பட்டது. தனித்தனி சட்டம், வறு மைக்கோடு பாராமல் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் கோடி அரசு ஒதுக்கி, சமூக பாது காப்புத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும் ஆகிய அனைத்து சங்கங் களின் கோரிக்கைகளை அரசு உதாசீனப் படுத்தி வருகிறது. ஊழியர் பென்சன் திட்டம் (இபிஎஸ்-95), புதிய பென்சன் திட்டம் போன்றவை திரட்டப்பட்ட தொழிலாளர் – ஊழி யர்களின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது. முறைசாராத் தொழிலாளர்கள் ஸ்வாவலம்பன் என்ற தேசீய பென்சன் அமைப்பில் (சூயவiடியேட ஞநளேiடிn ளுலளவநஅ) சேரவேண்டுமாம். 18 வயது முதல் 60 வயது வரை, ஆண்டுதோறும் ரூ.1000 செலுத்த வேண்டுமாம். மூன்று ஆண் டுக்கு மட்டும் அரசும் ரூ.1000 ஆண்டுக்கு என செலுத்துமாம். இந்த நிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுமாம். மொத்த பென்சன் தொகுப்பு நிதியில் 40 சதவீதம் முதலீடு செய்தால் ரூ.1000 மாதா மாதம் லாபம் வரும் என்றால், 60 சதவீத பங்குத்தொகையை திருப்பி அளிப்பார் களாம். ரூ.1000 ஓய்வூதியம் கிடைக்கு மாம்! 40 சதவீதம் முதலீடு போதாது என்றால், மொத்த பங்களிப்பும் முதலீடாக போகுமாம்! கேழ்வரகில் நெய் வடிகிறது. நிரந்தர வேலையோ, நிரந்தர வருமா னமோ இல்லாத முறைசாராத் தொழிலா ளர்களிடமிருந்து எந்த நிதியும் பெறா மலேயே, அரசு நியாயமான பென்சனை அனைவருக்கும் உறுதிப்படுத்த வேண்டும். பிப்ரவரி 28 வேலைநிறுத்தம் – தேசம் காக்கும் போராட்டம்! உழைப்பாளிகளின் நலன்களை, சாமானிய மக்களின் நலன் களை முன்னிறுத்தி நடைபெறும் போராட் டம்! இந்திய தொழிற்சங்க இயக்க வர லாற்றில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தொழிற் சங்கங்களும் இணைந்து நடத்தும் போராட்டம் ! ஜனஸ்ரீ பீம யோஜனா, தேசிய மருத்துவ க் காப்பீடு திட்டம், முன்னுரிமை கடன்கள் வழங் குதல், இருப்பு இல்லா வங்கிக் கணக்கு போன்ற சிறந்த அம்சங்களுடன் செயல் படும் அரசு நிதித்துறையை காத்திடும் போராட்டம்! 4.5 கோடி சில்லரை வணி கர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங் களின் நுழைவை தடுக்கும் போராட்டம் ; வேலை நியமன தடைச்சட்டத்தை அகற்றிட, வேலைவாய்ப்புகளை உருவாக் கிட நடைபெறும் போராட்டம்! வரலாறு படைக்கும் போராட்டம்! வெல்லட்டும்! வெல்லட்டும்!

Leave A Reply

%d bloggers like this: