ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் சாராட்சியர் அலுவ லகத்தை அடுத்து சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளதுதான் ஓசூர் அரசு மருத் துவமனை. 14 மருத்துவர்கள், 24 செவி லியர்கள் 23 மருத்துவமனை அலுவலர்கள், வாகன ஓட்டு னர்கள், துப்புரவுப் பணியாளர் கள், சிப்பந்திகள் என மொத் தம் 105 ஊழியர்கள் பணிபுரி கின்றனர். 164 படுக்கைகள், 15 வார்டுகள் கொண்ட மாவட்டத் தில் இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனை இது. சுமார் 3 லட்சத்திற்கு அதிக மான மக்கள் பயன்பாட்டின் மையமாக விளங்குகிறது. இங்கு போலியோ சொட்டு மருந்து போடும் நாட்களிலும், புதன், வியாழன் வாரநாட்களி லும் சுமார் 1200 நோயாளி களும் மற்ற நாட்களில் சுமார் 800 பேர் வரையிலும் தினமும் சுமார் 70 மாற்றுத் திறனாளிக ளும், கைகால், மூட்டுவலி உள் ளவர்கள் 100பேர் வரையிலும் வந்து செல்கிறார்கள். சாலை விபத்து என தின மும் பாதிக்கப்பட்டவர்கள் 10க் கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். 18 மாதங்களுக்கு முன்பாக ரூ.90 லட்சம் வரை இந்த மருத்து வமனை சீர்திருத்தத்திற்கு ஒதுக்கபட்டு, நவீனப்படுத்தப் பட்டு வேலைகள் முடியும் தரு வாயில் அரசு மருத்துவமனை கம்பீரமாக காட்சியளிக்கிறது. 2 வருடமாக மாற்றுத்திறனா ளிகள் முகாம்கள் இங்குதான் போடப்பட்டு வந்துள்ளது. ஆனால் சிவாஜி கணே சனின் ஞானஒளி படவசனம் போல் ஆயிரம் வசதிகள் இருந்தும் எலும்பு முறி வுக்கு மருத்துவர் இல் லையே… என் சோகக் கதை யை கேளு… தாய்க்குலமே அத கேட்டாக்கா தாங்காதம் மா ஒங்க மனமே என ஓசூர் அரசு மருத்துவமனையும், நோயாளிகளும் ஏக்கத்தோடு ஒன்றரை வருடமாகக் காத்தி ருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை, ஆர்த்தோ மருத்து வரும் போடப்படவில்லை. சமீபமாக அரசு மருத்து வமனை சீர்கேட்டை கண்டித் தும் ஆர்த்தோ மருத்துவர் உட னடித்தேவை எனவும் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத் தியதை மாவட்டச் செயலாளர் அஸ்வத் நாராயணன் கூறி னார். ஓசூர் சாராட்சியரும் மருத்துவமனை நிர்வாகமும் உடன் தலையிட்டு எலும்பு முறிவு (ஆர்த்தோ) மருத்து வரை அரசு மருத்துவமனை க்கு நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வாசுதே வன் கோரிக்கை விடுத்துள் ளார். ஒய்.சந்திரன்

Leave A Reply

%d bloggers like this: