உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிபதி கட்ஜு எச்சரிக்கை புதுதில்லி, பிப் .17- உத்தரப்பிரதேச அரசு பாரபட்சமாகச் செயல்படு வதாகத் தொடர்ந்து பத்தி ரிகையாளர்கள் புகார் அளித்ததன் அடிப்படை யில் முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு, ‘பத்திரிகைச் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று’ எச்சரித்துள்ளார். பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உரிமைகளின் மாதிரி விதிகளுக்கேற்ப செயல்படவேண்டுமென்று அவர் அரசு அதிகாரிக ளுக்கு எச்சரிக்கை தெரிவித் தார். மேலும் புகார்களின் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டு மென்று உத்தரவிட்டார். இவ்விஷயத்தில் தாமதம் ஏற்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதற்குக் காரணமானவர் கள் பொறுப்பாக்கப்படு வார்கள் என்று உயர் அதி காரிகளுக்கு எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகைச் சுதந்திரம் பெரு மளவில் மீறப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அரசு விளம்பரங்கள் மறுக்கப்படு வது, பத்திரிகை மற்றும் பத் திரிகையாளர்களை அங்கீ கரிக்க மறுப்பது போன்ற வகையில் பத்திரிகைச் சுதந் திரம் கட்டுப்படுத்தப்படு கிறது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் மாறானது என்பது என்னு டைய கருத்தாகும் என்று மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்தார். அரசு விளம்பரங்கள் அளிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் அத்த கைய குழு அமைக்கப்படா தது துரதிர்ஷ்டவசமானது. உத்தரப்பிரதேச அரசு அதி காரிகள் ஒருதலைப்பட்ச மாக நடந்து கொள்கிறார் கள். மேலும் பிரஸ் கவுன் சிலின் மாதிரி விதிகளை உத் தரப்பிரதேச அரசு புறக் கணித்துவிட்டது என்றே கூற வேண்டும் என்று கட்ஜு வேதனை தெரிவித் தார்

Leave A Reply