இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 500 பேர் விலகல் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர் புதுக்கோட்டை பிப்.16- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் மாநில, மாவட்ட நிர்வாகி யாக பணியாற்றியவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ராஜ சேகரன் தலைமையில் அக் கட்சிலிருந்து விலகி சுமார் 500 பேர் வியாழக்கிழமை யன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ராஜசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப் புகளை வகித்தவர். 17 ஆண் டுகாலம் மாவட்டச் செய லாளராகவும், 10 ஆண்டு களுக்கும் மேலாக மாநில நிர்வாகக்குழு உறுப்பின ராகவும் இருந்துள்ளார். மேலும் ஐந்தாண்டு காலம் ஆலங்குடி தொகுதி சட் டப்பேரவை உறுப்பினராக வும், பத்தாண்டுகாலம் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராகவும் பொறுப் புகளை வகித்துள்ளார். இவரோடு இந்திய கம் யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியவரும் புதுக்கோட்டை நகராட் சியின் முன்னாள் உறுப்பி னருமான சண்முக பழனி யப்பன், அக்கட்சியின் முன் னாள் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்ட சுமார் 500 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் தங் களை இணைத்துக் கொண் டனர். இணைப்பு விழா கடந்த வியாழக்கிழமையன்று புதுக் கோட்டை எஸ்விஎஸ் திரு மண மஹாலில் நடைபெற் றது. விழாவிற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எம்.சின்னத் துரை தலைமை வகித்தார். கட்சியில் இணைந்தவர் களுக்கு சால்வை அணி வித்து மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எம்எல்ஏ, மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம் ஆகியோர் கவுரவித்தனர். நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.செபஸ்தியான், க.செல் வராஜ், ஏ.ராமையன், எம். முத்துராமலிங்கம், எஸ்.சங் கர், எஸ்.கவிவர்மன், எம். உடையப்பன், என். பொன்னி, எஸ்.பொன்னுச் சாமி, வி.துரைச்சந்திரன், கே.சண்முகம், ஏ.ஸ்ரீரீதர் மற்றும் ஒன்றியச் செயலா ளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என ஏராள மானோர் கலந்து கொண் டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.