இந்தியா- சவூதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்பு ரியாத், பிப். 17- பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டுக்கமிட்டியை அமைக்க இந்தியா வும், சவூதி அரேபியாவும் முடிவு செய் துள்ளன. சவூதி பாதுகாப்புத்துறை அமைச்ச ரான இளவரசர் சல்மான் பீன் அப்துல் அசீஸ் அலி சவுத் மற்றும் இந்திய பாது காப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந் தோணி ஆகியோர் சந்திப்பு செவ்வாய்க் கிழமை நடந்தது. இருதரப்பினரும், இந்திய பெருங் கடல் பிராந்தியத்தில் கடற்கொள் ளை விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். இருநாடுகளின் குழு அளவிலான பேச்சு வார்த்தையில் பாதுகாப்பு ஒத் துழைப்பு தொடர்பாக கூட்டுக்குழு அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப் படும் என, சவூதி பாதுகாப்புத்துறை அமைச்சக செய் தித் தொடர்பாளர் சிதான் ஷீ கர் கூறினார். உத்தேசிக்கப்பட்ட குழு, மேலும் நீர் வரையறையில் பரஸ்பர ஒத்துழைப்பு மேற் கொள்வதற்கான சாத்தியக்கூறு களையும் ஆய்வு செய்யும். வளைகுடா பிராந்தியத் தில் பாதுகாப்பு நிலைமை ஆய்வு செய்தல் மற்றும் இருதரப் பினர் இடையேயான விவகாரங்களை, அமை திப்பேச்சு வார்த் தையில் தீர்வு காணுதல் போன்றவையும் இரு அமைச்சர்கள் ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: