கொசுறு * பொதுத்துறை பொது இன் சூரன்ஸ் நிறுவனமாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி 2011 டிசம்பர் 31-ல் முடிவடைகிற ஒன்பது மாதங்களில் ரூ.5872 வணிகத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்திற் கான வணிகத்தைவிட ரூ.1239 கோடிகள் அதிகம். அதாவது 27 சதவீத உயர்வு. * இந்தியாவின் இயற்கை எரிவாயு 2014-15ல் 36 சதவீதப் பற்றாக்குறையைச் சந்திக்கும் என்கிறார்கள். மின்சாரமும், உர மும்தான் இயற்கை எரிவாயுவை அதிகமாக நுகரும் துறைகள் ஆகும். இயற்கை எரிவாயு விலைகளை உயர்த்த வேண்டு மென்ற கோரிக்கை வந்துள்ளது. என்ன விளைவு? மின்சாரக் கட் டணம், உர விலைகள், கூடுகிற அபாயம் ஏற்படும். இது வேறு புதையல் பொதுத்துறையை வேட்டை யாடுவது நிற்கவில்லை. ஓ.என். ஜி.சி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்) நிறுவனத்தின் பங்கு விற்பனையை 2012 மார்ச் 31க்குள் முடிக்க வேண்டுமென்று அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஓஎன்ஜிசி-யில் அரசின் பங் குகள் 47 சதவீதம் உள்ளது. தற் போது மேலும் 5 சதவீதத்தை விற்கத் திட்டமிட்டுள்ளார்கள். 5 சத வீதம் எனில் 4.5 கோடி பங்குகள் ஆகும். ரூ.12000 கோடிகளுக்கு விற்பனையாகுமென்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் மத் திய அமைச்சரவையின் அதி காரபூர்வக்குழு இதன் மீது கருத் தொற்றுமையை இது வரை எட்ட வில்லை. ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? ஓ.என்.ஜி.சி சேர்மன் சுதிர்வாசுதேவ் என்ன சொல் கிறார்? “இப்பங்கு விற்பனை யால் ஓ.என்.ஜி.சிக்கு எந்த இலா பமும் இல்லை’’.

Leave A Reply

%d bloggers like this: