வேலுர், பிப். 17- ஆளும்கட்சி சட்ட மன்ற உறுப்பினரும் அரசு அதிகாரிகளும் வன் கொடு மையில் ஈடுபடுவதாக பாதிக் கப்பட்ட தலித் மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரி டம் புகார் மனு அளித்தனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடை யம்பட்டி கிராமத்தை சேர்ந்த 57 தலித் மக்கள் வாயில் கருப்பு துணி யை கட்டிக்கொண்டு, காலம் கடந்த நீதி, மறுக்கப் படும் நீதி என்ற பேனரை ஏந்திய வாறு மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதா வது:- நாங்கள் மூன்று தலை முறையாக சர்வே எண் 102/1ஏ அரசு புறம் போக்கு நிலத் தில் குடிசை அமைத்து வாழ் ந்து வருகிறோம். தாழ்த்தப் பட்ட வகுப்பை சார்ந்த எங் களை கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஜோலார் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலை மை ஆசிரியர், திருப் பத்தூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஜோலார் பேட்டை மூன்றாம் நிலை நகராட்சி செயல் அலுவலர் ஆகியோர் திட்டமிட்டு ஜோலார்பேட்டை தொகு தியின் தற்போதய சட்ட மன்ற உறுப்பினர் கே.சி.வீர மணி-யின் சுயநலனுக்காக வன்கொடுமை செயல்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட 29 பேரும் சென்னை உயர் நீதி மன்றத்தின் வழிக்காட்டு தலின்படி தனித்தனியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு விண்ணப் பித்தோம். தேசிய ஆணையம், வேலூர் மாவட்ட ஆட்சிய ருக்கு வழங்கிய உத்தர வின்படியும் திருப்பத்துர் தனி வட்டாட்சியரின் வழி காட்டு தலின்பேரிலும் விசாரணைக்கு வந்த வரு வாய்த் துறையினர் முறை யான விசாரனை நடத்த வில்லை. எனவே, மீண்டும் 23.1.2012ல் மாவட்ட ஆட்சி யரிடம் முறையீடு செய் தோம். பின்னர் திருப்பத்துர் வட்டாட்சியர் இந்த மாதம் 2ந்தேதி மறு விசாரணை செய்து ஆதார ஆவணங் களை பார்வையிட்டு குற்றச் செயல்கள் உறுதி செய்தும், மேல் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் கிடைக்க முறையான நட வடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யவில்லை. மாறாக, நாங்கள் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத் திற்கு கொடுத்த புகார் மனு வை திரும்பப் பெறும்படி வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் வன்கொடுமை செய்தவர்களை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது. எனவே, வன் கொடுமை சட்டத்தின்கீழ் தவறுசெய்தவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம. இவ்வாறு தெரிவித்திருந் தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.