திருப்பூர், பிப். 17- உடுமலைபேட்டை ஆர்.கே.ஆர். பள்ளியில் மாணவர் தற்கொலை சம் பவம் குறித்து தமிழக அரசு நீதி விசாரணை நடத்து வதுடன், பள்ளி நிர்வாகத் தின் குற்றச் செயலுக்கு உடந்தையாக செயல்படும் உடுமலை காவல் துறையி னர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டக் குழு வலியுறுத்தியுள் ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளியன்று திருப்பூர் தியாகி பழனிச் சாமி நிலையத்தில் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கரா ஜன் எம்.பி. மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்க வேல் எம்.எல்.ஏ. மாவட் டச் செயலாளர் கே.காம ராஜ் உள்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் அருகேயுள்ள ஆர்.கே.ஆர். மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவர்கள் மரணம டைந்துள்ளனர். ஜனவரி 19ம் தேதி கிருஷ்ணகுமார் என்ற 10ம் வகுப்பு மாண வர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பிப்ரவரி 15ம் தேதி அனுட்ஜ் என்ற 11ம் வகுப்பு மாணவர் பகிரங்க மாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டி கடிதம் எழுதி வைத் துவிட்டு தூக்கிட்டு தற் கொலை செய்திருக்கிறார். நூறு சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தைக் காட்ட வேண் டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் மிகக் கடுமை யான முறையில் மாணவர் களை கசக்கிப் பிழிந்துள் ளதை அப்பள்ளி மாண வர்கள் காவல்துறை விசா ரணையின்போது தெரி வித்துள்ளனர். கடந்த காலத்திலும் இப்பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்ப தாகவும், அவற்றை பள்ளி நிர்வாகத்தார் தங்கள் பண பலத்தின் மூலம் கல்வித் துறை, காவல்துறையிலும் மற்றும் அரசு நிர்வாகம், அரசியலில் உள்ள தங்கள் செல்வாக்கின் மூலமும் மூடி மறைத்துள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதி சம் பவத்தைக் கேள்விப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் உள்ளிட்ட அனைத் துக் கட்சியினரும் இப் பள்ளிக்குச் சென்றபோது உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக, பெற்றோர் வருவதற்கு முன்பாக அவசர அவசர மாக மாணவரின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். இதை எதிர்த்துக் கேட்ட அரசியல் கட்சித் தலை வர்களை தகாத வார்த்தை களால் திட்டியும், கைக ளால் தாக்கியும் தரக்குறை வாக நடந்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளிக்கு வெளியே திரண்டிருந்த சூழலில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளரின் இந்த நடவடிக்கை பெரும் பதற்றத்தை உருவாக்கி யுள்ளது. பொது மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற் பட்ட சூழலில் பள்ளி நிர் வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், தற்கொலைக்குத் தூண்டிய ஆசிரியரும், காவல் துறை யால் கைது செய்யப்பட்டி ருக்கிறார். தற்போது தலை மறைவாக இருக்கும் பள்ளி நிர்வாகியை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும். தற்போது மூடப்பட் டுள்ள இப்பள்ளியில் 2000 மாணவர்களின் கல்வி யைக் கருத்தில் கொண்டு உடனடியாக மாவட்ட கல்வித் துறை தலையிட்டு பெற்றோர் ஆசிரியர் கூட் டத்தை நடத்திட வேண் டும். மேலும் அச்சமில்லா மல் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு கல்வித் துறை குழு மூலம் தொடர் கண்காணிப்பு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். வேறெங்குமே இல் லாத “சிக் ரூம்” (நோயாளி அறை) என்ற ஒன்றை இங்கு வைத்து மனித உரிமைகளை மறுத்து வருகின்றனர். மாணவர் களுக்குக் கல்வி புகட்டும் சாலையில் இது போல் தனி ஏற்பாடு என்பதே அவர்களை மனிதர்களா கப் பாவிக்காத பார்வை தான். தமிழக அரசு இப் பள்ளியின் செயல்பாடு குறித்து முழுமையான நீதி விசாரணை நடத்த வேண் டும். பள்ளி நிர்வாகத்தின் வியாபார வெறியில் இது போல் இளம் பிஞ்சுகளைப் பலிகடா ஆக்கும் நிலை யைத் தொடர விடக் கூடாது. இது போன்ற குற்றச் செயல்களில் பள்ளி நிர்வாகத்துக்கு துணை போகும் உடுமலை காவல் துறை துணைக் கண்காணிப் பாளர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: