ஆப்கன் அரசு சார்பில் தலிபான்களுடன் அமெரிக்கா பேச முடியாது: கர்சாய் ஆப்கானிஸ்தான் அரசு சார்பில் தலிபான் தீவிரவாதி களுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தமுடியாது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் வெள்ளிக்கிழமை கூறினார். தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இடத்தை தமது நாட்டு அரசு மட்டுமே முடிவு செய்ய முடி யும் என்றும் அவர் கூறினார். தங்கள் நாட்டு விஷயத் தில் அமெரிக்கா குறுக்கிட முடியாது என்பதை, கர் சாய், திட்டவட்டமாகத் தெரிவித்தார். இஸ்லாமாபாத் வந் துள்ள கர்சாய் காலை நேர உணவு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தியா ளர்கள் மற்றும் எழுத்தாளர் களுடன் பேசுகையில், இவ் வாறு குறிப்பிட்டார். தலிபான் தீவிரவாதக் குழுக்களுடன் சவூதி அரே பியா அல்லது துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்து வோம் என்றார். பாகிஸ்தானில் மூன்று நாடுகள் மாநாட்டை ஜனா திபதி ஆசிப் அலி ஜர்தாரி நடத்துகிறார். இந்த மாநாட் டில் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில், பங்கேற்கும் வகை யில், கர்சாய் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளார். வளைகுடா நாடான கத் தாரில், ஆப்கானிஸ் தான் தலிபான்கள் அரசியல் அலு வலகம் திறந்துள்ளனர். அமெரிக்காவின் அறிவு ரைப்படி, அங்கு அலுவல கத்தைத் திறந்ததாக தலி பான் செய்தித் தொடர்பா ளர் ஒருவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்தநிகழ்வின் பின்ன ணியில் கர்சாய், அமெரிக் காவின் தலையீடு கூடாது என்பதைத் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார். கர்சாய் வியாழக்கிழமை இஸ்லாமாபாத் வந்திறங்கிய போது தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கி விட்டதாக அமெரிக்க நாளி தழ் நிருபரிடம் தெரிவித் தார். கர்சாயின் இந்த பதிலை தலிபான்கள் உடனடியாக நிராகரித்தனர். தலிபான் தீவிரவாத செய் தித் தொடர்பாளர் சமி புல்லா முஜாகித் கூறுகை யில், தலிபான் பிரதிநிதிகள் அதிகாரம் இல்லாத ஆப்கா னிஸ்தான்அரசுடன், எந்த இடத்திலும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றார். கர்சாய் நிர்வாகத் துடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமே தங் கள் அமைப்புக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.