வேலூர், பிப்.17- எரிபொருளின் விலைக்கு ஏற்ப ஆட்டோ தொழிற் சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசு மீட் டர் கட்டணத்தை நிர்ண யம் செய்ய வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட் டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஓட்டுநர் உரிமம் வைத் துள்ள அனைவருக்கும் பேட்ஜ் வழங்கப்படும் என்ற அதிமுக தேர்தல் அறிக் கையை தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும். வட்டாரப் போக்குவ ரத்து அலுவலகங்களில் தமி ழில் படிவங்கள் வழங்க அரசு உத்தரவிட வேண்டும், சென்னையில் வாங்கு வதைப் போல் அனைத்து மாவட் டங்களிலும் கேஸ்கிட் பொருத்த பதிவுக் கட்ட ணம் ரூ.90 வசூலிக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடந்தது. ஊர்வலம் செல்ல காவல்துறையின் அனுமதி மறுத்ததற்கு கண் டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் டி. அரிஹரன் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், மாவட்டத் தலைவர் எம்.பி. ராமச்சந் திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜி. லதா, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் கே. ஜோன்ஸ் பிரபாகரன் மற்றும் பலர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.