25 ஆயிரம் மாணவர் வகுப்பு புறக்கணிப்பு சென்னை, பிப். 16- தமிழகத்தில் புதிய அரசுக் கல்லூரிகளை திறந்திட வேண் டும், நவீன தொழில்நுட்பத் துக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவு களை துவக்கிட வேண்டும், காலியாக உள்ள பேராசிரியர், கவுரவ விரிவுரையாளர், நூலகர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், அரசு கல்லூரிகளில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம் தலை மையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், வகுப்பு புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். கடந்த பிப்ரவரி 7 அன்று அரசுக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கை மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று பெரும்பாலான மாவட் டங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநிலக்கல்லூரி யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட துணை தலை வர் ரமேஷ் தலைமையில் மாண வர்கள் பங்கேற்றனர். மாநிலக் குழு உறுப்பினர் ப. ஆறுமுகம் கோரிக்கையை விளக்கிப் பேசி னார். நந்தனம் கல்லூரியில் போராட் டத்தில் பங்கேற்ற மாணவர் களை கல்லூரி நிர்வாகம் மிரட் டியதோடு, போ°டர்களையும் கிழித்தெறிந்து அராஜகம் செய் தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட துணைத் தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். 1500 க்கும் மேற் பட்ட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் தில் மாவட்ட செயலாளர் ராஜன், தலைவர் ஜெயந்தி, இளங்கோ உள்ளிட்டோர் பங் கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் மாவட்ட செய லாளர் தா° தலைமையில் வகுப் புகளை புறக்கணித்து போராட் டத்தில் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் ரெ.°டா லின் விளக்கிப் பேசினார். விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அரசு கலைக் கல் லூரியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட செய லாளர் குருமூர்த்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி யில் மாவட்டச் செயலாளர் அரசன் தலைமையில் 2000 மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசுதா முன் னிலை வகித்தார். சிதம்பரம் முட்லூர் அரசு கலைக் கல்லூரி யில் நகர செயலாளர் பாலாஜி, கோபால் ஆகியோர் தலைமை யில் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், விருத்தாச் சலம் அரசு கலைக் கல்லூரியில் மாவட்டத் தலைவர் சிவபாலன் தலைமையில் 2000 க்கும் மேற் பட்டோரும் வகுப்புகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் திரு. வி.க அரசு கலைக்கல்லூரியில் மாவட்டத் தலைவர் கொடியர சன் தலைமையில் 1500 மாண வர்கள் வகுப்புகளை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செய லாளர் தமிழ்ச்செல்வன் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் தலைமை யில் 2200 மாணவர்கள் வகுப் புகளை புறக்கணித்தனர். மாவட்ட செயலாளர் அருளரசன் கோரிக்கையை விளக்கிப் பேசி னார். மாவட்ட நிர்வாகிகள் சத்யா, கவிதா, பாலா ஆகியோர் பங்கேற்றனர். கும்பகோணம் அரசு ஆட வர் கல்லூரியில் 2000 மாண வர்கள் மாநிலக்குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடந்தை மகளிர் அரசுக் கல் லூரியில் மாவட்டத் தலைவர் கலைச் செல்வன் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். திருச்சி மாவட்டத்தில் திரு வெறும்பூர் அரசு கலைக் கல் லூரியில் மணிமாறன் தலைமை யில் 1500 மாணவர்கள்; லால் குடி கல்லூரியில் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலை மையில் 1500 மாணவர்கள்; இனாம்குளத்தூர் கல்லூரி, முசிறி அரசுக் கல்லூரி மாண வர்கள் வகுப்புகளை புறக் கணித்து பேரணியாக சென்று ஆர்டிஓ அலுவலகத்தை முற்று கையிட்டனர். இப்போராட் டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணத் தமிழன், செந்தமிழன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரியில் 1500 மாண வர்கள் வகுப்புகளை புறக்க ணித்து மாவட்டத் தலைவர் சபரிநாதன் தலைமையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் அருணன் கோரிக் கையை விளக்கிப் பேசினார். கரூர் மாவட்டத்தில் குளித் தலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக் கணிப்பு செய்து கிளை தலைவர் °டாலின் தலைமையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைச் செயலாளர் போ° போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். நாமக்கல் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா, திருவள் ளூர் இராமலிங்க அரசு கல்லூ ரிகளில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், இந்துமதி ஆகியோர் பங்கேற்றனர். மதுரை புறநகர் மாவட் டத்தில் மேலூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்டச் செய லாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் °காட் கல்லூரி, பழனிவேல் குமார சாமி, டபிள்யுசிசி சிவந்தி ஆதித் தனார் கல்லூரி, தேவிகுமார் கலைக்கல்லூரி போன்ற கல் லூரிகளில் வகுப்புகளை புறக் கணித்து, குமரி மாவட்டத்தில் அரசு கல்லூரியை துவக்கிட வேண்டும் என கோரிக்கை முழக்கமிட்டு 300 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட்டனர். மாவட்டத் தலைவர் சாம் ராஜ், செயலாளர் அஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மகா தேவன், அஜய், ஆன்°, சுபின் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மதுரை மாநகர், விருதுநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நெல்லைஅரசுக் கல்லூரி மற்றும் தேனி ஆண் டிப்பட்டி உறுப்பு கல்லூரியில் மாணவர்கள் வகுப்பை புறக் கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மாவட் டச்செயலாளர் கணேஷ் தலை மையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநாட்டின் அறைகூவலை ஏற்று போராட்டத்தில் ஈடு பட்ட மாவட்டக்குழுவுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இந்திய மாணவர் சங்க மாநி லக்குழு சார்பாக மாநிலத் தலைவர் கே.எ°. கனகராஜ், மாநிலச் செயலாளர் ஜோ. ராஜ் மோகன் ஆகியோர் வாழ்த்துக் களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.