ஹோண்டுராஸ் சிறையில் பயங்கரத் தீ : 359 கைதிகள் மரணம் கோமயகுவா (ஹோண்டுராஸ்), பிப். 16- ஹோண்டுராஸ் நாட் டின் சிறையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 359 கைதிகள் மரணமடைந்த னர். தீயால் சிறை வளாகம் முழுவதும் கரும்புகை தூசு மயமாக ஆனது. ஹோண்டுராஸின் தலைநகர் தெகுசிகால்பா வில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள கோமய குவா சிறையில் செவ்வாய்க் கிழமை பயங்கரத் தீ பரவி யது. இந்தத் தீயில் இருந்து தப்பிக்க கைதிகள் மோதிக் கொண்டு ஓட முயன்றனர். இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தால், நெரிசலில் சிக் கிக் கொண்ட கைதிகளில் 359 பேர் கருகி உயிரிழந்த னர் என்று அந்த நாட்டின் அட்டர்னி ஜெனரல் அலு வலகம் தெரிவித்தது. சிறை யை தீ சூழ்ந்து கொண்டது. அலறல் சத்தம் தொடர்ந்து கேட்டது. பூட்டப்பட்ட சிறையில் இருந்து தப்ப முடி யாமல் கைதிகள் பரிதவித்த னர். ஒரு கைதி தனது உட லில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டதால், நெரிசல் மிக்க சிறையில் தீ கடுமை யாக பரவியது. எரிந்து போன வளாகப்பகுதியில் இருந்து பல உடல்கள் எடுக்கப்பட் டன. சிறை வளாக தீ விபத் துகளில் மிக மோசமான சம் பவம் என ஹோண்டுராஸ் கவலை தெரிவித்தது. உயிரிழந்த கைதிகளின் குடும்பத்தினர் காவல்துறை யினர் மீது கம்புகளை எறிந்து, போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் திட்ட மிட்டே தீ விபத்தை ஏற்ப டுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தீயில் உடல்கள் கருகியதால் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு பல் மற்றும் மரபணு சோத னை நடத்த வேண்டியுள்ளது என அதிகாரிகள் கூறினர். ஒரு கைதி கூறுகையில், வளாக பகுதி 6ம் நம்பரில் இருந்த கைதி, மெத்தையில் தீ வைத்து எரித்து, தற்கொ லை செய்தார் என்றார். ஹோண்டுராஸ் தீ விபத்து உலக சமூகத்தை அதிர்ச்சி அடைய வைத் துள்ளது. ஹோண்டுராஸ் சிறையில் ஏற்பட்ட 3வது பெரும் தீ விபத்து இதுவா கும். சிறையில் உள்ள இட வசதிக்கு அதிகமாக இரண்டு மடங்கு கைதிகள் இந்த சிறை யில் அடைக்கப்படுகின்றனர்.

Leave A Reply