லீட்ஸ்-மெட்ரோ பாலிடன் பல்கலை.க்கு எதிராக மாணவர்கள் போராட்டம் இந்தியாவின் முதல் அந்நிய உயர்நிலை கல்வி மையம் போபால், பிப். 15- இந்தியாவில் அயல் நாட்டு பல்கலைக்கழகம் அமைத்த முதல் உயர் நிலைக்கல்வி மையமான லீட்ஸ் மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகத்தை எதிர்த்து மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் மாணவர்கள் புதன்கிழமை யன்று போராட்டம் நடத்தினர். அகில இந்திய புரட்சிகர மாணவர்கள் அமைப்பு (ஏஐஆர்எஸ்ஓ) தலைமையில், புரட்சிகர இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்எப்), இந்திய மாண வர் சங்கம் (எஸ்எப்ஐ), சிக்ஷா அதிகார் மன்ச் மாணவர்கள் பல்வேறு கல் லூரிகளில் இருந்து திரண்டு வந்து லீட்ஸ் மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட் டனர். லீட்ஸ் பல்கலைக் கழக கல்வி மையம் பிரிட்ட னின் லீட்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் ஜாக்ரம் நல சமூகம் கூட்டாக இணைந்து நடத்துவதாகும். ஜாக்ரம் லாப நோக்கம் இல்லாத தொண்டு நிறுவனம். இதன் உரிமையாளர் ஜாக்ரன் ஊடக குழுமம் ஆகும். இந்தியாவை விட்டு லீட்ஸ் மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகம் வெளி யேற வேண்டும் என மாண வர்கள் கோஷம் எழுப்பினர். முதலாளித்துவ கல்வி மாதிரி உருவ பொம்மையையும் மாணவர்கள் எரித்தனர். பாலர் பள்ளி முதல் முது நிலை பட்டப்படிப்பு வரை இலவசக்கல்வி அளிக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர். இந்தியாவில் முதலாளித் துவ கல்வியை தூண்டும் பிரதிநிதியாக லீட்ஸ் பல் கலைக்கழகம் உள்ளது என மாணவர்கள் கூறினர். அந் தப் பல்கலைக்கழகம் மீது மத்திய அரசோ, மாநில அர சோ நடவடிக்கை எடுக்க வில்லை. லீட்ஸ் பல்கலைக் கழக சான்றிதழ் இந்தியா வில் வழங்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்தப் பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரிக்கவில்லை. அனைத்துத் தரப்பினருக் கும் கல்வி என்பது அவர் களது நோக்கமல்ல. லாபம் குவிக்க வேண்டும் என்பதே அவர்களது கொள்கை என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொந்தளித்தனர். உயர்கல்வியை வியாபார மாக்குதல் மற்றும் தாராள மயத்தை கண்டித்து மாண வர்கள் 12 நாள் நடத்திய போராட்டத்தின் நிறை வுக்கு முந்தைய நாளில் லீட்ஸ் பல்கலைக் கழக வளாகத்தை மாணவர்கள் முற்றுகை யிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.