ராடியா டேப் : மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி புதுதில்லி: டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவுடன் தொடர்புடைய சர்ச் சைக்குரிய ராடியா டேப் வெளியானது தொடர்பாக நடந்த விசாரணை அறிக் கையை பகிர்ந்துகொள்ள முடியுமா? என, மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வியாழக் கிழமை கேட்டது. ரத்தன் டாடாவுடன், தொழில் நிறுவனங்களுக்கு இடைத்தரக ரான நீரா ராடியாவும் பேசியது தொடர் பான சர்ச்சைக்குரிய டேப்,மாற்றப்பட்டு, ஊடகத்தில் வெளியானது தொடர்பாக மத்திய அரசு நடத்திய விசாரணை அறிக்கை தேவை என, டாடா கோரி இருந்தார். அவரது வேண்டுகோள் மனு அடிப்ப டையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாயா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், மத்திய அரசு பதில் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அரசு, தனது பதிலை அளிக்க 3 வாரம் அவசாகம் அளிக்க நீதிமன்றம் தொடர் விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த அறிக்கையை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மத்திய அரசு துவக் கத்தில் தயங்கியது. ராடியாவின் தொலைபேசிப் பேச்சுக் களை வருமானவரித்துறை எவ்வாறு பதிவு செய்தது என்பது குறித்து விசாரணை தொடரும் நிலையில், அறிக்கையை வெளி யிட அரசு தயக்கம் காட்டி இருந்தது. மத் திய அரசு இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி யன்று சீலிடப்பட்ட உறையில், அறிக் கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தி ருந்தது. ராடியா டேப் விஷயங்கள் திருத் தப்பட்டு ஊடக நிறுவனங்கள் ஒளிபரப் பின. டேப் வெளியானதற்கு மத்திய அரசு பொறுப்பு இல்லை என ஜனவரி 31ம் தேதி, உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது. டாடாவுக்கும் இடைத்தரகர் நீராரா டியாவுக்கும் இடையே நடந்த தொலை பேசி பேச்சுக்கள் விவரம் டேப் செய்யப் பட்டதில், தொலைபேசி சேவை அளிப்ப வர் உள்பட 8 முதல் 10 முகமைகள் தொடர்பு கொண்டுள்ளன என்று அரசு தெரிவித்தது. அரசு அறிக்கையில் இருவர் இடையே நடந்த தொலைபேசி பேச்சு விவரத்தில் தொடக்கமும் முடிவும் உண்மையான டேப் பதிவுடன் ஒத்துப்போகவில்லை என கூறப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: