மு°லிம்களுக்கு இடஒதுக்கீடு வாக்குறுதி உ.பி. தேர்தலில் காங். கபட நாடகம் உத்தரப்பிரதேச தேர்தல் சூடு நாடு முழுக்கப் பரவத் துவங்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியை இழந்த காங்கிர° கட்சியால் இன்னும் அங்கு ஆட்சி யைப் பிடிக்க இயலவில்லை. மேலும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சூழலில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசின் வெற்றி மிக முக்கிய பங்காற்றும் என்று அது கருதுகிறது. முதலிடத் தைப் பிடிப்பது சாத்தியமில்லை என்பது வெள்ளிடை மலை யென்றாலும், இரண்டாவது இடத்தையாவது பிடித்தால் தான் காங்கிரசுக்கு எதிர்காலமுண்டு என்ற நிலையில் காங்கிர° கட்சி உள்ளது. எனவே தான் காங்கிர° கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்கால பிரதமர் வேட் பாளர் என்று கருதப்படுபவருமான ராகுல் காந்தி சமீப காலமாக உத்தரப்பிரதேசத்தைச் சுத்தி, சுத்தி வந்து கொண்டிருக்கிறார். குடிசைகளில் கஞ்சி குடிக்கிறார். ஏழை மக்களிடம் பரிவு காட்டுகிறார். தெருவோரக் கடை களில் டீ குடிக்கிறார் என ஊடகங்களில் பெருமளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு அவரது தாயும் காங்கிர° தலைவியுமான திருமதி சோனியா காந்தி மட்டுமல்லாமல், சகோதரி பிரியங்காவும் பிரச்சாரத்திற்கு களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில்தான் காங்கிர° கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவரும், மத்திய சட்டத்துறை அமைச் சருமான சல்மான் குர்ஷித் திடீரென மு°லிம்களுக்கு 9 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுமென அறிவிக்க, அதை பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள், மத்திய அமைச்சர் தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்தும், மீண்டும் அவர் அதைத் திரும்பவும் கூற, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்ததோடு குடி யரசுத் தலைவருக்கும் புகார் செய்துள்ளதாக ஊடகங் களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் மு°லிம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த காங்கிரசின் நிலைபாடு என்ன? உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கையில் கூட மு°லிம்களுக்கு எவ்வளவு சதவிகி தம் இட ஒதுக்கீடு என்று குறிப்பிட்டு வாக்குறுதி வழங்காத நிலையில்தான், சல்மான் குர்ஷித்தின் தேர்தல் பிரச்சாரத் தில் 9 சதவிகித ஒதுக்கீடு என்ற அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் நீதிபதி ரங்கநாத் மி°ரா குழு, சிறுபான்மை மக்க ளுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென் றும், அதில் 10 சதவிகிதம் மு°லிம்களுக்கு வழங்க வேண்டுமென்றும் பரிந்துரையை பிரதமரிடம் 2007 மே 10 ல் வழங்கியது. ஆனால் அந்த குழுவை அமைத்த மத்திய காங்கிர° அரசு, 2 ஆண்டுகளாக அந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்தது. 2009 ல் இடது சாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே நடத்தவிடாமல், ரங்கநாத் மி°ரா கமிஷன் அறிக்கையை வெளியிட வேண்டுமென்று நிர்ப்பந்தம் கொடுத்த பின்னர்தான், நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை வைக்கப் பட்டது.ஆனால் இது நாள்வரை அந்த அறிக்கை குறித்து மத்திய காங்கிர° அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில்தான் காங்கிர° கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் இம்ரான் கித்வாய் வெளியிட்ட அறிக் கையில், ரங்கநாத் மி°ரா கமிஷன் அறிக்கை அரசியல் சட்டப்படியோ, சட்டப்படியோ நடைமுறை சாத்தியமற்றது என்று கூறிய செய்தி, நியூ இந்தியன் எக்°பிர° பத்திரி கையில் 12.2.2010 ல் வெளிவந்தது.இதுநாள் வரை காங் கிர° கட்சி சார்பிலோ அல்லது அரசு சார்பிலோ மு° லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வராத நிலையில் தான், உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிர° கட்சியின் அமைச்சர் குர்ஷித் இப்படி நீட்டி முழங்குகிறார். மு°லிம்களின் பாதுகாவலன் என்பது போன்ற மாயையை உருவாக்க முயல்கிறார். காங்கிரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், மு° லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு குர்ஷித்தின் தனிப்பட்ட கருத்து என்று புறந்தள்ளிவிட்டார். மேற்கு வங்கத்தில் மு°லிம்களுக்கு 10- சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய இடதுசாரி அரசைப் போல் வழங்க யோக்கிதை யற்ற காங்கிர° உத்தரப்பிரதேச தேர்தலில் நடத்துவது அரசியல் மோசடி நாடகமே. -எஸ். நூர்முகமது

Leave a Reply

You must be logged in to post a comment.