மின் வெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு, பிப். 16- கடுமையான மின் வெட்டைக் கண்டித்து மார்க்சி°ட் கட்சியின் சார்பில் திருச்செங்கோடு நகரில் சூரியம்பாளையம் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசைத்தறி தொழில்கள் உள்ளிட்ட சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான மின் வெட்டினால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு மின் வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். வீடுகளுக்கும், சிறு விசைத்தறி கூடங்களுக்கும் மின் கட்டணத்தை உயர்த்த முயற்சிப்பதைக் கைவிட வேண்டும் போன்ற முழக்கங்களுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திருச்செங்கோடு நகரக்குழு உறுப்பினர் எ°. முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எ.ஆதிநாராயணன், நகர செயலா ளர் எம்.சிவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் எ°.சேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: