மார்ச் 26ல் கூட்டுறவு ஊழியர் சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் மதுரை, பிப். 16 – தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழுக் கூட் டம் பிப்ரவரி 12ம் தேதி யன்று மதுரையில் மாநில செயல் தலைவர் பொன்.வசந் தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன. கூட்டுறவு நிறுவன ஊழி யர் அனைவருக்கும் ஓய்வூதி யம் வழங்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவன ஊழியர் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை உரு வாக்கி அமலாக்கிட வேண் டும். அனைத்து கூட்டுறவு ஊழியர்களுக்கும் அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் மற்றும் இதரப் படிகள், விடுப்பு சலுகைகள் வழங்கிட வேண்டும். விவசா யக் கடன் தள்ளுபடியால் நிலுவைத் தொகை முழுவ தையும் விடுவித்து, புதிய பயிர்க் கடன் வழங்கிட வேண் டும். பொது விநியோக திட்ட ஊழியர்களுக்கு நுகர் பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணை யான ஊதியம், ஒருதுறை ஆய்வு, சேதாரக்கழிவு அனு மதித்தல், சீருடைப்படி அனைவருக்கும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் பதவி உயர்வு வழங்க வேண் டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பால் கூட்டுறவு, கைத்தறி, வீட்டு வசதி, மீனவர் கூட்டுறவு என செயல் பதிவாளர் கட் டுப்பாட்டில் உள்ள கூட்டு றவு நிறுவன ஊழியர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தினக்கூலி, தொகுப்பூதிய முறைக்கு முடிவு கட்டி கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவ னங்களில் 480 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களை பாதுகாத்து ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதிய உயர்வு ஆணை வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்ச் 12 முதல் ஒருவார காலம் பிரச் சார இயக்கம் நடத்துவது எனவும், மார்ச் 26 அன்று சென்னையில் தொடர் முழக் கப் போராட்டம் நடத்துவ தெனவும் முடிவு செய்யப் பட்டது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, உதவி தலை வர்கள் எம்.அசோகன், ஆர். ஜீவானந்தம், எம்.சுப்ரமணி யம், டி.வின்சென்ட், என். சுந்தர்ராசன், இணைச் செய லாளர்கள் அருணாசல பெருமாள், கே.ரவி, எல்.கே. மனோகரன், எம்.ரங்கசாமி, எம்.சின்னச்சாமி, பி.என். இராஜ்குமார், ஜி.எஸ்.அமர் நாத், முருகையன், கருப்ப சாமி உட்பட மாநில நிர்வா கக்குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.