மாணவர் தற்கொலை விவகாரம் : ஆர்.கே.ஆர். பள்ளி மூடல் நிர்வாகி தலைமறைவு; ஆசிரியர் கைது திருப்பூர், பிப். 16 – உடுமலை ஏரிப்பாளை யத்தில் அமைந்துள்ள ஆர்.கே.ஆர்.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதி யில் தூக்கில் தொங்கிய 11ம் வகுப்பு மாணவர் அனூஜ் என்கிற அனுராஜை தற் கொலைக்குத் தூண்டியதாக அப்பள்ளி பொருளாதார பாட ஆசிரியர் மகேஸ்வ ரனை (வயது 27) காவல் துறையினர் கைது செய்த னர். இந்த வழக்கில் இரண் டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பள்ளித் தாளாளர் ஆர்.கே.ராமசாமி தலைமறைவு ஆகிவிட்டார். அவரைப் பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத் துள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே இடையன்கோட்டை முதலியார் தோட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் அனுராஜ் (வயது 16). ஆர்.கே.ஆர். பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாண வர் புதனன்று காலை விடுதி யில் உள்ள “நோயாளிகள் அறை” மின் விசிறியில் தூக் கில் தொங்கினார். தனது வகுப்புப் பொரு ளாதார பாடப்பிரிவு ஆசிரி யர் மகேஸ்வரன் மீது குற் றஞ்சாட்டி, தன்னை தற் கொலைக்குத் தூண்டியதாக அனூஜ் எழுதி வைத்திருந்த மூன்று கடிதங்களையும் காவல் துறையினர் கைப்பற் றியுள்ளனர். அனூஜின் சடலம் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அனூ ஜின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பள்ளி ஆசி ரியர் மகேஸ்வரன், தாளா ளர் ஆர்.கே.ராமசாமி ஆகி யோர் மீது காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய் துள்ளனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்த பின் அனூஜின் சடலம் நேரடி யாக அவரது சொந்த ஊருக் குக் கொண்டு செல்லப்பட் டது. ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து இரு மாணவர் கள் இறந்துள்ள சம்பவங்க ளால் இப்பள்ளி நிர்வாகத் தின் மீது பெற்றோர்கள், பொது மக்கள் கடும் கோபா வேசத்தில் உள்ளனர். எனவே அனூஜ் தற்கொலைச் சம்ப வத்தைத் தொடர்ந்து விரும் பத்தகாத சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக புதன் கிழமை முதல் இப்பள்ளி மூடப்பட்டது. கல்வித்துறை உயரதி காரிகள், பெற்றோர்கள் கூட்டத்தை நடத்தி அடுத்த வாரம் இப்பள்ளியைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி தெரிவித் தார்.

Leave A Reply

%d bloggers like this: