மனிதாபிமானமும் காவல்துறையும் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமி ழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ளார். காவல்துறை பயிற்சி அகாடமி நிகழ்ச்சியில் பேசிய அவர், “மனிதனை விலங்குகளிடமிருந்து வேறு படுத்திக்காட்டுவது ஒழுக்கமே ஆகும். ஒழுக்கம் என்பது எண்ணத்தாலும் சொல்லா லும் செயலாலும் தூய்மையாக நடந்து கொள்வ தாகும்’’ என்று கூறியுள்ளார். காவல்துறையினர் பொதுமக்களிடம் நெருங் கிப் பழகுவதில்லை என்ற குறைபாடு பல ஆண் டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. சட்டம்- ஒழுங்கு பிரச்சனை முதல் வீட்டுத் தகராறு வரை பொதுமக்கள் காவல்நிலையத்தை அணுகி வருகிறார்கள். தங்களது பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் காவல்துறையில் உள்ள சிலரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்வது இன்றைய அவசிய தேவையாகும். மக்களை கண்டாலே விரட்டுவது போல் பேசுவது? வேற்றுக் கிரகவாசி போல் பார்ப்பது, மிரட்டும் தொனியிலான பேச்சு, பார்வை ஆகியவை காவல்நிலையம் என்றாலே பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது. மோச மான அணுகுமுறையை காவல்துறை கைவிட வேண்டும். பல காவல்நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய கூட மக்கள் போராட வேண்டியுள்ளது. அச்சத்தை போக்க வேண்டிய காவல்துறையினரே மக்களை அச்சு றுத்துவது தான் வாடிக்கையாக உள்ளது. சமீபத் தில் கூட சென்னை ஐசிஎப்பில் காவல்துறை நண்பன் குழுமத்தில் செயல்பட்ட ஒருவரே காவல்துறையினரால் லாக்கப்பில் அடித்துக் கொல்லப்பட்டார். காவல்துறை நண்பனுக்கே இந்த கதி என்றால் பொதுமக்களுக்கு எப்படி என்று சொல்லத் தேவையில்லை. காவல்நிலையங்களுக்கு, பிரச்சனை என்று வந்துவிட்டால் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி தீர்வு காணவேண்டும். இல்லை என்றால் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திடம் ஒப்ப டைக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பல் வேறு காவல்நிலையங்கள் இன்று கட்டப் பஞ் சாயத்துக்களாகவே செயல்படுகின்றன. காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்களை மரியாதையோடு நடத்துவதோடு குற்றம்சாட் டப்பட்டவர்களையும் மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும் என்று ஏட்டில் எழுதி வைத் தால் போதுமா? அதைச் செயல்படுத்த என்ன முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத் திற்கு புகார் தெரிவிக்கச் சென்றால் ஆய்வாளர் இல்லை, உதவி ஆய்வாளர் இல்லை என்று மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். காவல் நிலையக் கைதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று பல பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ள போதி லும் நடைமுறையில் அவை செயல்படுத்தப் படாமலே உள்ளது. பொதுமக்கள் போராட்டம் நடத்தும்போது அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்துப்பேசி சுமுகத் தீர்வு காண முயற்சிப்பது என்பதே சமீப காலமாக அருகி வருகிறது. இரும்புக் கரங்களை கொண்டு போராட்டங்களை நசுக்குவோம் என் றெல்லாம் பேசுவது என்பது சரியல்ல. இது போராடும் மக்களையும் காவல்துறையினரை யும் மோதவிடும் செயலே அன்றி வேறுஏதும் இல்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.