மத்திய அரசின் சேவை வரியை எதிர்த்து 23ந் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து – திரையரங்கங்கள் மூடல் சென்னை, பிப். 16 – மத்திய அரசு இந்திய திரைப்படத் துறையின ருக்கு அறிவித்துள்ள சேவை வரியை உடனடியாக திரும் பப் பெறக்கோரி வருகிற 23ந் தேதி இந்தியா முழுவதும் ஒருநாள் வேலை நிறுத் தத்தை அகில இந்திய திரைப் படத்துறை அறிவித்துள் ளது. இந்த வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக திரைப்படத்துறையி னரும் அன்று (பிப்.23) ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள் ளனர். இதுகுறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்நாடு திரைப்பட விநி யோகஸ்தர்கள் கூட்ட மைப்பு, தமிழ்நாடு திரைப் பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரி மையாளர்கள் சங்கம் மற் றும் சென்னை சிட்டி திரை யரங்க உரிமையாளர்கள் சங்கம் சேர்ந்து வெளியிட் டுள்ள கூட்டறிக்கையின் விவரம் வருமாறு: மத்திய அரசு ‘சேவை வரி` என்ற புதிய வரியினை திரையுலகிற்கு 10.3 விழுக் காடு விதிக்க உத்தேசித்துள் ளது. இந்த சேவை வரியினை தள்ளுபடி செய்யுமாறு பல முறை அகில இந்திய அள வில் மத்திய அரசிடம் கோரிக் கையை வைத்தும் எந்த பலனும் கிட்டவில்லை. எனவே மத்திய அரசின் இந்த புதிய சேவை வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் அகில இந்திய திரைப்படத்துறை யின் அனைத்துப் பிரிவின ரும் பிப்ரவரி மாதம் 23ந் தேதி(வியாழக்கிழமை) அன்று அகில இந்திய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்துவது என்று தீர்மா னிக்கப்பட்டிருக்கிறது. எனவே வரும் பிப்ரவரி மாதம் 23ந் தேதி அகில இந் தியத் திரைப்படத்துறை யைச் சார்ந்த தயாரிப்பாளர் கள், இயக்குநர்கள், நடிகர்- நடிகர்கள், விநியோகஸ்தர் கள், திரையரங்கு உரிமை யாளர்கள், ஸ்டுடியோக்கள், லேபரட்டரிகள் போன்ற அனைத்து பிரிவினரும் (23.2.2012) அன்று இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பை தெரி விக்கத் தீர்மானித்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் கள் சம்மேளனத்தலைவர் ‘அபிராமி` ராமநாதன் கூறியதாவது :- மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி இந்தியா முழுவதும் திரைப்படத் துறையினர் அனைவரும் அதாவது தயாரிப்பு பணிகள் மற்றும் திரையரங்கம் அனைத்தை யும் மூடுவது என தீர்மா னிக்கப்பட்டுள்ளது. அதன் படி சென்னை நகரின் அனைத்து தியேட்டர்களி லும அன்று(23ந் தேதி) ஒரு நாள் காட்சிகள் முழுவது மாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.

Leave a Reply

You must be logged in to post a comment.