மக்கள் மன்றம் ஏனிந்த மவுனம் தூத்துக்குடி, நெய்வேலி என பல இடங்களிலும் அனல்மின் நிலையங் களில் ஏற்பட்டுள்ள பழுதுபற்றி தீக்க திரில் வந்துள்ளது. சமச்சீர் கல்வியை தடுக்கவும், சட்ட மன்றக் கட்டடம், அண்ணா நூல கத்தை இடம் மாற்றவும், மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப் பவும் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வேகம், ஒலியின் அளவைக் கூட மிஞ்சிவிடும். ஆனால், மின்வெட்டு நேரத்தின் எண்ணிக்கை 10 மணிநேரத்தைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. அதைத்தடுக்க ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட்டதாக தெரியவில்லை. மின்வெட்டு என்ற ஒருவிஷயம் தமி ழகத்தில் இருப்பதாகவே முதல்வர் காட் டிக்கொள்ளவில்லை. மிகுந்த மவு னம் சாதிக்கிறார். – பார்வதி, கும்பகோணம் பொறுப்பான பார்வை 14.2.12 தீக்கதிரில், “பிப்ரவரி 14- காதலர் தினம்; காதல் ஒருபோதும் பொறுப்பற்றதாக இருப்பதில்லை” – சு.பொ.அகத்தியலிங்கத்தின் பொருள் பொதிந்த கட்டுரை படித்தேன். “காத லும் காமமும் ஒன்றல்ல; காமம் மட் டுமே, காதல் அல்ல; தமிழ்ச் சினிமா வில் காட்டப்படுவதெல்லாம்- ஊடகங் களில் சித்தரிக்கப்படுவதெல்லாம், காத லல்ல” எனக் கட்டுரையாளர் கூறுவது, ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. ஆனால், நமது பெரும்பாலான அச்சு ஊடகங் கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங் கள், இவற்றில் காதல் கொச்சைப் படுத்தப்படுகிறது; காமச்சுவை கொப் பளிக்கும் காட்சிகளும், வசனங்களும், பாடல்களும், எவ்வித வெட்கமும் மானமும் இன்றி, படத்தயாரிப்பாளர் களாலும், இயக்குநர்களாலும், திணிக் கப்படுகின்றன; சுருங்கச் சொன்னால், மட்டரக ரசனையைக் காதல் எனும், ‘காமெடி’ எனும் சாக்கிலும், மென் மேலும் வளர்த்து, காசு பணத்தை அள் ளிக் குவிப்பதே இவர்களின் தலை யாய நோக்கம்; இந்தச் சூழ்நிலையில், “காதல் ஒரு போதும் பொறுப்பற்றதாக இருப்ப தில்லை” என்று அழகாகவும், தெளி வாகவும், சீரிய எடுத்துக்காட்டு களுடன் விளக்கும் சு.பொ.அ.வின் தத் துவ விளக்கக் கட்டுரை, மிக அருமை! – தி.க.சி., நெல்லை- 6 ஓய்வூதிய மோசடி 9.2.12 தீக்கதிரில் வந்துள்ள, “ஓய்வூதியத்தைச் சூறையாடும் திட் டம்” நல்லமுறையில் எழுதப்பட்டுள் ளது. இந்த மோசமான திட்டத்தை அர சியல் ரீதியாக பார்ப்பதற்கு அனை வரும் மறுக்கின்றனர். 1980களில் தில் லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சித் (திட்ட) கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களில், இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த ஓய்வூ தியத் திட்டத்தை எதிர்த்தனர்; கூட்டத் திலிருந்து வெளிநடப்பும் செய்திருக் கின்றனர். மற்ற எல்லா கட்சிகளைச் சார்ந்தவர்களும், இந்த மோசமான ஓய்வூதியத் திட்டத்தை ஆதரித்துள் ளனர். இவ்விஷயம், மத்திய – மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்களில் பெரும் பாலோருக்கு தெரியாது. உலகிலுள்ள நாடுகள் சிலவற்றில், அதாவது இடதுசாரிகள் தற்போது ஆட்சிசெய்யும் நாடுகளில் இந்த புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, ஊழியர்களுக்கு நன்மை தரும் பழைய பென்சன் திட்டமே கொண்டு வரப்பட்டுள்ளது. – சி.ராஜகுமார், ராஜபாளையம் பாதைகளில் போதைக்கடை “டாஸ்மாக் கடை வருமானத்தை விட குழந்தைகளின் எதிர்காலம் முக் கியம்” என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருள் பொதிந்தது; தொலை நோக்குப் பார்வையோடு சொல்லப் பட்ட கருத்து; அதுமட்டுமன்றி, ஆள் வோரின் அடிமனத்தில் பதியப்படிய வேண்டிய கருத்து. இந்த தீர்ப்புக்கு உட்பட்ட இடம் மட்டுமல்ல; தமிழகத்தின் பெரும் பாலான டாஸ்மாக் கடைகள், மக் களின் மனத்தில் சங்கடத்தை ஏற்படுத் தக்கூடிய விதத்தில், பிரதான சாலைச் சந்திப்புக்களில், பேருந்து நிறுத்து மிடங்களில், பள்ளிக்குச் செல்லும் வழிகளில், கோயில், மசூதிகள், பெண் கள் அதிகம் வந்துசெல்லும் இடங் களில்தான் உள்ளன. எனவே, அந்த ஒரு கடையை மூடச் சொன்னதோடு நின்றுவிடாமல், அரசுக்கு மனிதநேய கோட்பாடுகளையும் நீதிமன்றம் அறி வுறுத்த வேண்டியது, அவசியமாகும். – சுத்தியன்,வேலாயுதம்பாளையம்

Leave A Reply

%d bloggers like this: