மகப்பேறு கால விடுமுறையை 24 வாரமாக அதிகரிக்க வேண்டும் இந்திய தொழிலாளர் மாநாட்டில் வலியுறுத்தல் புதுதில்லி, பிப். 16- இந்திய தொழிலாளர் மாநாட்டில் அமைக்கப் பட்ட சமூக பாதுகாப்புக் குழு, மகப்பேறு கால விடு முறையை 24 வாரமாக அதி கரிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 44வது இந்திய தொழி லாளர் மாநாடு புதன்கிழமை முடிவடைந்தது. 2 நாள் நடந்த இந்த மாநாட்டின் துவக்க தினத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசுகையில், பெண் ஊழியர்கள் வீட்டுப் பணிகளையும், அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய நெருக்கடிகளை புரிந்துகொள்ள வேண்டி யுள்ளது. நாட்டில் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை யை அதிகரிக்க நடவடிக் கை மேற்கொள்ளப்படுகி றது என்றார். சம்பளம் அளிப்பதில் ஆண்களை ஒப்பிடுகையில் பெண்கள் பணித்திறனில் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. தொழிலாளர் மாநாடு குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான மல்லி கார்ஜூன் கார்கே செய்தியா ளர்களிடம் கூறினார். தொழிலாளர் சேமநலத்திட் டத்தில் அதிக உறுப்பினர் களை சேர்க்க வேண்டும். 20 தொழிலாளர்கள் பணிபுரி யும் இடத்தில் சேமநல நிதி சட்டம் (இபிஎப்) உள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கை 10 உள்ள இடத்திலும், இபி எப் பிடிக்க வேண்டும் எனவும் இபிஎப் சட்ட மனுவுக்கு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பள விகி தம் ரூ.6500 என்பதை ரூ.10 ஆயிரம் அல்லது ரூ.15 ஆயிர மாக அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக பாதுகாப்பு குழு வலியுறுத்தியது. தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை மற்றும் இளை ஞர்களின் திறன் மேம் பாட்டு நடவடிக்கை, வேலை வாய்ப்பை அதிகப் படுத்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது.

Leave A Reply

%d bloggers like this: