புரட்சியைத் தடுக்கும் 3 தடைகளை கண்டறிந்த சிங்காரவேலர் சென்னை கருத்தரங்கில் முத்துமோகன் பேச்சு சென்னை, பிப். 16 – புரட்சியைத் தடுக்கும் 3 தடைகள் எவை என்பதை கண்டறிந்து கூறியவர் சிங் காரவேலர் என்று மதுரைப் பல்கலைக் கழக குருநானக் தத்துவ மைய தலைவர் பேரா. ந. முத்துமோகன்கூறினார்.சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையும், சிங்காரவேலர் சிந்தனைக் கழகம்-அறக்கட்டளையும் இணைந்து புதனன்று (பிப்.15) நினைவுச் சொற்பொழிவை நடத்தின. ‘சிங்காரவேலர்.. தமிழ்ச்சூழல்-மார்க்சியம்` என்ற தலைப்பில் பேரா. ந.முத்துமோகன் பேசியது வருமாறு:- சாதி ஒழிப்பு, சமூக நீதி பற்றி பேசுகிற பணக்கார மனோபாவம் கொண்ட இந்திய சீர்திருத்தவாதிகள், அதனை தொழிலாளர் இயக்கமாக மாற்றவில்லை என்று சிங்காரவேலர்கருத்துகொண்டிருந்தார். ஆனால் அவற்றை கம்யூனிஸ்ட்டுகள்தான் மக் கள் இயக்கமாக மாற்றினர். எங்கு கொடுமை அதி கம் உள்ளதோ, அங்கே அதற்கான பரிகாரம் தேடும் முயற்சிகள் அதிகம் இருக்கும். அதன்படி பார்த்தால் ரஷ்யாவைவிட, முன்கூட் டியே இந்தியாவில்தான் புரட்சி வந்திருக்க வேண்டும் என்று கூறிய சிங்கார வேலர், சாதி, மதம், பொருளாதார பேதம் ஆகிய மூன்றும் புரட்சி வருவதைத் தடுக்கும் அரணாக இருந்தன என்று ஒரு பிரச்சனையின் இருபக்கங்களை யும் கண்டறிந்து கூறினார். அம்பேத்கரும் இதேபோன்றகருத்தைக்கொண்டிருந்தார். சோசலிச புரட்சிக்கு முன்பாக ஜனநாயக புரட்சி நடைபெற வேண்டும் என்று மார்க்சியர்கள் கூறுகின்ற னர். இதுகுறித்து சிங்கார வேலர் 1938களிலேயே பேசியுள்ளார். ஒருவேளை சோசலிசப் புரட்சியைவிட, சாதி ஒழிப்பு என்ற ஜன நாயக புரட்சி அதிகளவில் வன்முறை கொண்டதாக இருக்கும். சாதியை தொட் டால் ஆளும் வர்க்கத்திடம் இருந்து கடும் வன்முறை வருகிறது. சாதியை பாது காக்கும் குணம் தற்போது தலித் மக்களிடமும் வந் துள்ளது. சாதியை கைவிடும் விருப்பம் தலித் இயக்கங்களுக்கும் இல்லை என்று ஆனந்த் டெல்டும்டே கூறுகிறார். பகுத்தறிவு, சமூகநீதி, சோசலிசம் ஆகியவற்றிற்குகொடுத்த முக்கியத்துவத்தை பகுத்தறிவு இயக்கத்தின ரும், சோசலிச இயக்கத்தி னரும் கொடுத்தனர். திராவி டக் கட்சிகள் பொறுப்பேற்ற பிறகு பகுத்தறிவுக்கும், சமூக நீதிக்கும் உரிய முக் கியத்துவம் தரவில்லை. தனித்தமிழ், தமிழ் கற்பு, தமிழ் அறம், செம்மொழி போன்ற சொல்லாடல்கள் தமிழ் மக்கள் தராதரப்படுத்தும் வேலையை செய் தது. இதனால் பகுத்தறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டது. சிங்காரவேலர் முன்வைத்த உழைக்கும் மக்கள் திட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டது எதனால்? சாதி, இன, மத அடிப் படையான இயக்கங்களால் ஹிட்லரிசம்தான் ஏற்படும். ஜனநாயகம் தழைக்காது என்று சிங்காரவேலர் கூறினார். சாதி ஒழிப்பு என்று பேசியவர்கள் ஏன் விகிதாச் சாரத்திற்குள் மட்டும் முடங்கிப் போனார்கள்? இவ்வாறு அவர் கூறி னார். நல்லக்கண்ணு புலவர் பா.வீரமணி எழு திய சிங்காரவேலரின் சிந்த னைகள் என்ற நூலை வெளியிட்டு பேசிய கம்யூனிச இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, புதிய சிந்தனைகளை தோற்றுவித்த சிந்தனை சிற்பி சிங்காரவேலர், செயல் முன்னோடியாகவும் இருந் தார். ஒரு பிரச்சனை வரும் போது அதற்கு முந்தைய பிரச்சனை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. ஒரு கருத்து தொடர்ச்சி யாக விவாதிக்கப்பட்டால்தான் அது மக்கள் மத்தியில் இருக் கும். மையப்புள் ளியையும், நடைமுறையில் வருகிற பிரச் சனையையும் இணைத்துக் கொண்டு சென்றால் இயக்கம் சீரானதாக இருக்கும் என்றார். இக்கூட்டத்திற்கு சென் னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் வீ. அரசு தலைமை தாங்கினார். இ.சாமிக்கண்ணு, புலவர் பா.வீரமணி உள்ளிட்டோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.