புதிய சுற்றுலாத்தலம் அமைக்க திரிபுரா அரசு தீவிரம் அகர்தலா, பிப். 16- திரிபுரா குமதி மாவட் டத்தில் 42 சதுர கி.மீ. பரப் பளவில் திட்டுத்தீவுகளுடன் உள்ள தும்பர் ஏரிப்பகு தியை புதிய சுற்றுலாத் தலமாக ஆக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மிகப்பெரும் நீர்நிலை யில் சிதறிக்கிடக்கும் தீவுப் பகுதிகளில் சுற்றுலா பய ணிகள் தங்குவதற்கான காட் டேஜ் கட்ட முடிவு செய் யப்பட்டுள்ளது. 3 மலைகள் மற்றும் பசுமை காடுகளை பின்னணியாக கொண்ட தும்பூர் ஏரி, பயணிகளை கவர்ந்து இழுப்பதாக உள் ளது. இயற்கை அழகுகளை மேலே இருந்து ரசிப்பதற் காக கண்காணிப்புக் கோபு ரங்கள், உணவு விடுதிகள், சிறு பொழுதுபோக்கு பூங் கா ஆகியவை தென் னைத் தீவுப்பகுதியில் அமைக் கப் படுகின்றன. ஏரியின் நுழைவுவாயில் பகுதி யான மண்டிர் காட்பகுதி யில் ஏணிகள் அமைப்பது டன் தண்ணீர் விளையாட் டுக் கள் சுற்றுலாப் பயணி களு க்கு அறிமுகம் செய்யப் படுகின்றன. திரிபுராவின் முக்கிய நீர் ஆதார நதியாக குமதி ஆறு உள்ளது. ரய்மா மற்றும் ஷர்மா நதிகள் இணைந்து குமதி ஆற்றை உருவாக்கு கின்றன. குமதி ஆறு பசு தலையின் வடிவ கல் மீது ஓடி வந்து விழும் இயற்கை நீர்வீழ்ச்சியாக உள்ளது. சத்தீஸ்கரை மையமாக கொண்ட கட்டிடக் கல் லூரி சுற்றுலா திட்டத்தலம் அமைக்க, திட்டம் உரு வாக்கி உள்ளது. குமதி ஆற் றின் மீது நீர்மின் நிலை யத்திட்டம் செயல்படுவ தால் 35 ஆண்டுகளாக குமதி ஆற்றின் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால், சுற்றுலா தலம் அமைக்க திரிபுரா அரசு முடிவு செய் துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: