பாலக்காட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலை புதுதில்லி, பிப். 16- கேரள மாநிலத்தின் பாலக் காட்டில் ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலை ஒன்றை அமைக்க, மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. நிலமதிப்பு தவிர்த்து ரூ.550 கோடி முத லீட்டில் அரசு – தனியார் கூட்டு முயற்சியில் இத்தொழிற்சா லையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டுதுறையில் அமை யும் தொழிற்சாலையின் 26 விழுக்காடு முதலீட்டை ரயில்வே செய்யும். பாலக்காட் டில் நிறுவப்படும் இத்தொழிற் சாலைக்கு தேவையான சுமார் 239 ஏக்கர் நிலத்தை மாநில அரசிடமிருந்து ரயில்வேத் துறை விலைக்கு வாங்கும். தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா, இம்மாதத்தில் நடைபெறும் என்று ரயில்வே அமைச்சர் திரிவேதி, கேரள முதல்வரிடம் கூறியுள்ளார். 2012-13ல் தொடங்கும் கட்டு மானப்பணி மூன்று ஆண்டு களில் நிறைவடையும். ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை திறப்பு ஜம்மு/ஸ்ரீநகர், பிப். 16- கடும் பனிப்பொழிவு, மண்சரிவு ஆகியவற்றால் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை பய ணிகள் போக்குவரத்திற்காக வியாழக்கிழமையன்று மீண் டும் திறக்கப்பட்டது. ரம்பான் பகுதியில் சாலைகளில் மண் சரிவால் குவிந்திருந்த மண், பனிப்பொழிவால் நிறைந் திருந்த பனி ஆகியவற்றை அகற்றியபின் இருவழிப் போக்குவரத்துக்காக நெடுஞ் சாலை திறக்கப்பட்டது என்று காவல்துறை அதிகாரி கூறி னார். வியாழனன்று சாலை மூடப்பட்டதால் பல இடங் களில் சிக்கித்தவித்த மக்கள் தங்களுடைய சொந்தப் பகுதி களுக்கு திரும்ப உதவிடும் வகையில், மாநில அரசுப் பேருந்துகள் மட்டும் சாலை யில் அனுமதிக்கப்பட்டன. கடந்த இரவு முதல் சுமார் 600க்கும் மேற்பட்ட வாகனங் கள் காஷ்மீர் பள்ளத்தாக் கிற்கும், சுமார் 300க்கும் மேற் பட்ட வாகனங்கள் ஜம்முவிற் கும் சென்றன என்று அதி காரிகள் கூறினர். அசாம் அரசு செயலகத்தில் தீ குவாகாத்தி, பிப். 16- அசாம் தலைநகர் குவா காத்தியில் திஸ்பூர் பகுதியில் உள்ள அரசு செயலகத்தில் திடீரென்று நெருப்பு பற்றியது. செயலகத்தின் மூன்றாம் மாடி யில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் புதன்கி ழமை இரவு நெருப்பு பற்றியது. நெருப்பு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிய வில்லை. தடயவியல் துறை அதிகாரிகள் புலன் விசா ரணை நடத்தி வருகிறார்கள். செயலக வளாகத்தில் நிறு வப்பட்டுள்ள நெருப்பு கட் டுப்பாடு சாதனங்களால் நெருப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. ஆளில்லா விமானம் தாக்கியதில் 6 பேர் சாவு இஸ்லாமாபாத், பிப். 16- வடக்கு வஸிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ள தீவிர வாதிகள் மீது அமெரிக்க ஆளில்லா விமானம் தொடுத்த ஏவுகணைத் தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப் பட்டதுடன் 7 பேர் காய மடைந்தனர். அப்பகுதியின் முக்கிய நகரான மிரான்ஷாவின் அரு கில் உள்ள ஸ்பால்கை பகுதி யில் அல்கொய்தா தீவிரவாதி களின் முகாம் உள்ளன. கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் அல்கொய்தா உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான பாதர் மன்சூர் கொல்லப்பட்டார். ஒரு வீட்டின் மீது இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்ட தாக உள்ளூர் மக்கள் கூறினர். வீடுமுழுவதும் சிதைந்துவிட் டது. பாதுகாப்பு அதிகாரிகள் தொலைக்காட்சி செய்திக ளில் தாக்குதலை உறுதிப் படுத்தினர். ஆப்கானிஸ்தா னில் உள்ள அந்நிய படை களைக் குறிவைத்துத்தாக்கும் தீவிரவாதிகள் குழு இப்பகுதி யில் உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.