பிப். 28 வேலை நிறுத்தம் ஆட்டோ தொழிலாளர்களும் பங்கேற்பு சென்னை, பிப். 16 – பிப்ரவரி 28 அன்று நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஆட்டோ தொழிலாளர்களும் முழு மையாக பங்கேற்பது என்று முடிவு செய்துள்ளார்கள். அனைத்து ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் வடசென்னை மாவட்ட சிஐடியு அலுவல கத்தில் பிப்ரவரி 14 அன்று தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் எம். எஸ்.ராஜேந்திரன் தiமை யில் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரி வாயு விலைகளை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்து வதை கைவிட வேண்டும்; ஆட்டோ தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒருங் கிணைந்த சமூக பாது காப்பு சட்டமும் நலநிதி ஆணைய மும் உருவாக்க வேண்டும். கோரிக்கைகளை எழுப்ப தொழிலாளர்களுக்கு உள்ள அடிப்படை உரிமையான சங்கம் அமைக்கும் உரி மையை அங்கீகரித்து அதை செயல்படுத்த உத்தரவாத படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28 அன்று நடைபெறும் வேலை நிறுத் தத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் பங் கேற்பது என்று முடிவு செய் யப்பட் டது. அத்தியாவசிய பொருட் கள் மற்றும் எரிபொருட்க ளின் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்ட ணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு ஆண்டாக கூட்டப்படாத ஆட்டோ நலவாரியக்குழுவை உடன டியாக கூட்ட வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவருக்கும் பேட்ஜ் வழங்கப்படும் என்கிற தேர்தல் கால வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். வாட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் டீசல் ஆட்டோ பர்மிட் கான செயல்முறை ஆணை வழங்கப்பட்டு, ஆட்டோ வாங்கி உள்ளவர்களுக்கு உடனடியாக பொது வாகன மாக பதிவு செய்து கொடுக் கப்பட வேண்டும். போக்கு வரத்து அலுவலகங்களில் தமிழில் படிவங்களை வழங்கி அரசு உத்திரவிட வேண்டும். முக்கிய இடங்களில் போக் குவரத்திற்கு இடையூறு இல் லாமலும் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகிலும் ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இக்கூட்டத்தில் சிஐடியு சார்பில் பி.கருணாநிதி, ஏ. எல்.மனோகரன், வி.வி.திரு மாறன், ஏஐடியுசி சார்பில் தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளன பொதுச் செயலாளர் ஜே.சேஷசய னம், எல்பிஎப் சார்பில் சு. நாகராஜன், ஐஎன்டியுசி சார் பில் எஸ்.சந்தானகிருஷ் ணன், எம்.ஜி.அழகேசன், சென்னை சிட்டி ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளர் ஜே.மானோகரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: