பிப்.28 வேலைநிறுத்தம்: முறைசாரா தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் திருப்பூர், பிப்.16- முறைசாரா தொழிலாளர் நலவாரியத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருப்பூரிலும் வேலைநிறுத்தம் நடத் துவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் தொழி லாளர் துறை அதிகாரியிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தனர். விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிற் தகராறு சட்டத்தை உறுதியாக அமல் படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனப்பங்கு களை விற்பனை செய்யக் கூடாது, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த, கேசுவல் வேலைகளை ரத்து செய்து நிரந்தரத் தன்மை கொண்ட வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதிக்கு 9.5 சதவிகித வட்டியை உறுதிப் படுத்த வேண்டும், மத்திய சட்டத்தில் கட்டுமான நலவாரியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28ம் தேதி இந்த பொது வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. திருப்பூரிலும் கட்டுமானம், கைத்தறி, சாலை யோர வியாபாரம், ஆட்டோ, தனியார் போக்கு வரத்து, சாய, சலவை, உணவகம் உள்பட பல்வேறு முறைசாரா தொழில்களில் வேலை செய்யும் லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இது குறித்து திருப்பூர் மாவட்ட முறைசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலர் மகேந்திர வர்மனிடம் சிஐடியு முறைசாரா தொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் டி.குமார், ஏஐடியுசி திருப்பூர் மாவட்ட பொதுச் செய லாளர் எஸ்.சங்கர், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா ளர் ஏ.சிவசாமி, எச்எம்எஸ் மாவட்டச் செயலா ளர் ஆர்.காளியப்பன், எல்பிஎப் மாவட்டப் பொரு ளாளர் கொ.ப.நாராயணசாமி, பிஎம்எஸ் கட்டு மான சங்கச் செயலாளர் ஆர்.செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: