பிப்ரவரி – 28 பொது வேலை நிறுத்தம் ஈரோட்டில் வெற்றி பெறச் செய்ய அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு ஈரோடு, பிப். 16- பிப்ரவரி – 28-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஈரோடு மா வட்டத்தில் மாபெரும் வெற்றியடையச் செய் வது என்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற் றும் தொழில்வாரி சம்மேள னங்களின் ஈரோடு மா வட்ட நிர்வாகிகள் கூட் டம் ஐஎன்டியுசி மாவட் டத்தலைவர் கே.ஆர்.தங்க ராஜ் தலைமையில் ஈரோட் டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத் தில் மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலா ளர் விரோத கொள்கை களை எதிர்த்தும் விலை வாசி உயர்வு கட்டுப்பாடு என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 28-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து தொழிலாளர் களும் முழுமையாக பங் கேற்பது. மேலும் அன்றைய தினம் ஈரோட்டில் ஆயிரக் கணக்கான தொழிலாளர் கள் பங்கேற்கும் மாபெ ரும் பேரணி மற்றும் ஆர்ப் பாட்டம் நடத்துவது. வேலை நிறுத்தப் போராட் டத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில் மாவட் டம் முழுவதிலும் பிரச்சா ரக் கூட்டங்கள் நடத்து வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இக்கூட்டத்தில் சி.ஐ. டி.யு மாவட்டச் செயலா ளர் எஸ்.சுப்ரமணியன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் சின் னசாமி,எச்.எம்.எஸ். மாவட்டச் செயலாளர் ராஜபொம்மண்ணன், ஏ.ஐ.சி. சி.டி.யு மாவட்டத் தலை வர் ஏ. கோவிந்தராஜ், ஏ.ஐ. யு.டி.யு.சி மாவட்டச் செய லாளர் டி. பாலகிருஷ் ணன், ஏ.ஐ.பி.ஈ.ஏ. மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். கணேஷ், என்.எஃப்.டி.ஈ.- பி.எஸ்.என்.எல் மாவட்ட உதவித் தலைவர் எம்.யா சின், பி.எஸ்.என்.எல்.ஈ.யு மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) எல். பரமேஸ் வரன், டி.என்.ஜி.ஈ.ஏ மா வட்டச் செயலாளர் பொ. ஆறுமுகம், டி.என்.ஜி.யு.ஈ மாவட்டச் செயலாளர் சி. தங்கராஜ், என்.எஃப்.பி.ஈ கோட்டச் செயலாளர் கே. சுவாமிநாதன், டி.என்.பி. டி.ஈ மாவட்டத் தலைவர் க.மனோகரன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். இதேபோல் அகில இந்திய வேலை நிறுத் தத்தை வெற்றி பெறச் செய் வோம் என அரசு போக்கு வரத்து ஊழியர் அனைத்து சங்க கூட்டம் ஈரோடு சி.ஐ. டி.யு மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்றது. இதில் வருகின்ற 28-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் போக் குவரத்துக் கழக ஊழியர் கள் அனைவரும் கலந்து கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை மாபெ ரும் வெற்றியடையச் செய் வது. அது தொடர்பாக பிப்ரவரி 18-ம் தேதி வரை அனைத்துக் கிளைகளி லும் வாயிற் கூட்டங்கள் நடத்துவது. இதையடுத்து 20-ம் தேதி ஈரோடு மண் டல அலுவலகம் முன்பாக வும் வாயிற் கூட்டம் நடத் துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இக்கூட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு, எல்.பி. எஃப், ஐ.என்.டி.யு.சி, டி.டி. எஸ்.எஃப், ஏ.ஐ.டி.யு.சி, எச். எம்.எஸ் ஆகிய தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: