பதற்றத்தைத் தடுக்க சீன அரசு கட்டுப்பாட்டில் திபெத் மடாலயங்கள் பெய்ஜிங், பிப்.16- திபெத்தில் உள்ள ஒவ்வொரு மடாலயத்திலும் நிர்வாகக் குழுவை சீன அரசு அமைக்கிறது. மடாலயங்களில் பதற்றத்தைத் தடுக்கும் வகையில் இந்த புதிய ஏற்பாட்டை அரசு மேற்கொண்டுள்ளது. திபெத்திய புத்த மடாலயங்களில் சில துறவிகள் பிரச்சனை காரணமாக திடீரென தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால், அந்த மடாலயங்களில் பதற்ற நிலை நிலவுகிறது. அங்கு பதற்றநிலையை தடுப்பதற்காக சீன அரசு சார்பில் நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. தன்னாட்சி பிராந்தியமான திபெத்தின் ஒவ்வொரு மடாலயத்திலும் ஒரு நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு, மடாலய விவகாரங்கள் கவனிக்கப்படுகிறது என உள்ளூர் மத விவகார பொறுப்பு அதிகாரி அரசு ஊடகத்திற்கு பெய்ஜிங்கில் தெரிவித்தார். இந்த நிர்வாகக் குழுவிற்கு அரசு அதிகாரிகள் தலைவர்களாக உள்ளனர். இந்தக் குழுவில் துறவிகளும் சுற்றுலா வரவேற்பு, கலாச்சார சின்ன பாதுகாப்பு, உள்ளூர் மக்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் மத விவகாரத்துறையுடன் பணியாற்றும் கன்னியாஸ் திரிகளும் இடம் பெற்றுள் ளனர் என மத விவகாரத் துறைக்கான இயக்குநர் லுவோபு துன்சு அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் நாளிதழுக்குத் தெரிவித்தார். திபெத் மடாலய குழுக்கள் நியமனப் பணி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியது. இந்த ஆண்டு துவக்கத்தில் 1787 மடாலயங்களில் நிர்வாகக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. திபெத்தில் 40 ஆயிரம் புத்ததுறவிகள் உள்ளனர். வருகிற வாரம், திபெத்திய புத்தாண்டு பிறப்பதை யொட்டி, பதற்றம் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. திபெத்திய புத்தாண்டு பிப்ரவரி 22ம் தேதி வருகிறது. லாசாவை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி, மடாலய நிர்வாகக் குழுக்களிடம் ஸ்திரமான சமூகச் சூழல் மற்றும் ஒற்றுமையை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: