பட்டியலின மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி இல்லா நிலை உருவாக வேண்டும்! கோவை, பிப். 16- பட்டியல் இன துணைத்திட்டம் நடை முறைப்படுத்துவது குறித் தான கலந்தாய்வுக் கூட் டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மா வட்ட ஆட்சியர் எம். கரு ணாகரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திட் டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிரு°துதா° காந்தி தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மக்களுக்கு திட்டம் போடும்போது, அதிகாரிகள் பணி திட்டம் தீட்டுவது அல்ல. எங்கு திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ, அங்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அரசு ஊதியத்தில் இருப்பவர்களுக்கும் பட்டி யல் இன மக்களுக்கும் இடைவெளி என்பது நிறை யவே உள்ளது. எனவே இடைவெளியில்லா நிலையை உருவாக்க வேண் டும். தமிழக அரசு இந்த ஆண்டு சிறப்பு உட்கூறு திட்டத்தின் மூலம் பட்டி யலின மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கி யுள்ளது. திட்டமிடுதல் என்பது ஆதிதிராவிடர் நலத்துறையை மட்டுமே சார்ந்ததாக இருக்கக் கூடாது. தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறி யியல்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும். பேரூராட்சிகள் மற் றும் உள்ளாட்சி பகுதி களில் சாலைகள் அமைக் கும்போது பொது நிதி யுடன் சிறப்பு உட்கூறு திட்ட நிதியும் சேர்ந்து செலவழிப்பது தெரியா மலே இம்மக்கள் உள்ள னர். ஆனால், துணைத் திட்ட நிதி முழுக்க முழுக்க தலித் மக்களின் நலத்திட்டங்களுக்கு மட் டுமே செவழிக்கப்படு கிறதா? என அம்மக்கள் தான் கண்காணிக்க வேண் டும். கோவை மாவட்டத் தில் கூட்டுறவுத் துறையின் மூலம் பட்டியலின மக்கள் எவ்வளவு பேர் பயன் அடைந்தார்கள் என கேட் டார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் 2011-12 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் ரூ.103 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டியலின மக்க ளுக்கு 1 கோடியே 28 இலட்சம் மட்டுமே வழங் கப்பட்டுள்ளது. இம்மக் களுக்கு நிலம் இல்லாத காரணத்தால் வழங்க இயலவில்லை. மேலும் பட்டியல் இன மக்கள் 930 பேர் மட்டுமே கூட்டுறவு உறுப்பினர்களாக உள்ள னர் என்றனர். அடுத்து பேசிய கூடு தல் தலைமைச் செயலா ளர், திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கூட்டு றவுத் துறையில் பட்டிய லின மக்கள் 40 சதம் வரை உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். பெற்ற கடனை திருப்பி செலுத்துபவர் களாக பட்டியலின மக்கள் 96 சதமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே. சிவஞானம், தலை வர் வி.பெருமாள், ஆதித் தமிழர் விடுதலை முன் னணியின் மாநில அமைப் பாளர் ரவிக்குமார் மற்றும் தலித் பொது நல அமைப் பினர் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.