பட்டியலின மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி இல்லா நிலை உருவாக வேண்டும்! கூடுதல் தலைமைச் செயலாளர் கிரு°துதா° காந்தி கோவை, பிப். 16- பட்டியல் இன துணைத்திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எம். கருணாகரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிரு°துதா° காந்தி தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மக்களுக்கு திட்டம் போடும்போது, அதிகாரிகள் பணி திட்டம் தீட்டுவது அல்ல. எங்கு திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ, அங்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அரசு ஊதியத்தில் இருப்பவர்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் இடைவெளி என்பது நிறையவே உள்ளது. எனவே இடைவெளியில்லாநிலையை உருவாக்க வேண்டும். தமிழக அரசு இந்த ஆண்டு சிறப்பு உட்கூறு திட்டத்தின் மூலம் பட்டி யலின மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. திட்டமிடுதல் என்பது ஆதிதிராவிடர் நலத்துறையை மட்டுமே சார்ந்ததாக இருக்கக்கூடாது. தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும். பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள் அமைக் கும்போது பொது நிதியுடன் சிறப்பு உட்கூறு திட்ட நிதியும் சேர்ந்து செலவழிப்பது தெரியாமலே இம்மக்கள் உள்ளனர். ஆனால், துணைத்திட்ட நிதி முழுக்க முழுக்க தலித் மக்களின் நலத்திட்டங்களுக்கு மட்டுமே செவழிக்கப்படுகிறதா? என அம்மக்கள் தான் கண்காணிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் பட்டியலின மக்கள் எவ்வளவு பேர் பயன் அடைந்தார்கள் என கேட்டார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் 2011-12 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் ரூ.103 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டியலின மக்களுக்கு 1 கோடியே 28 இலட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு நிலம் இல்லாத காரணத்தால் வழங்க இயலவில்லை. மேலும் பட்டியல் இன மக்கள் 930 பேர் மட்டுமே கூட்டுறவு உறுப்பினர்களாக உள்ளனர் என்றனர். அடுத்து பேசிய கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி போன்ற ாவட்டங்களிலும் கூட்டுறவுத் துறையில் பட்டிய லின மக்கள் 40 சதம் வரை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். பெற்ற கடனை திருப்பி செலுத்துபவர்களாக பட்டியலின மக்கள் 96 சதமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே. சிவஞானம், தலைவர் வி.பெருமாள், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தலித் பொது நல அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply