பட்டினிப்பிடியில் பட்டு நூற்பாளர்கள் மின்வெட்டால் தினம் 30 ரூபாய் ஊதியம் பெறும் அவலம் இரண்டு மணி நேரம் மட் டும் மும்முனை மின்சாரம் வழங் கப்படுவதால் பட்டு நூற்புத் தொழி லாளர்கள் பட்டினிக் கொடுமைக்கு உள்ளாகி அவதிப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் அதிக அளவு பட்டு நூல் உற்பத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை வட் டங்களில் பட்டுப் புழு வளர்ப்பின் மூலம் கிராமப்புற வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. அதை சார்ந்து பட்டு நூல் நூற்பு நூல் முறுக்கேற்றுதல், பட்டு நெசவு என தொழில்களும் வளர்ந்தன. மத்திய-மாநில அரசுகளின் தாராளமயக் கொள்கைகளின் விளை வாக கடந்த சில ஆண்டுகளாக இத்தொழில்கள் பெரும் பின்ன டைவை சந்தித்து வருகின்றன. மல்பரி சாகுபடி நிலப்பரப்பு குறைந்து பட்டுப் புழு வளர்ப்பு சுருங்கி விட்டது. ஆனால் அதை சார்ந்த மற்ற தொழில்களில் இறக்கு மதி செய்யப்படும் பட்டுநூல் பெரு மளவில் பயன்படுத்தப்பட்டு வரு கிறது. இதற்காக நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு மும்முனை மின்சாரம் தேவை. தற்போது விவசாயத்துக்கு வழங்கப்படுவது போல் மிக குறைவான நேரம் மின்சாரம் வழங் கப்படுகிறது. இதனால் பாகலூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மிக குறுகலான தனது வீட்டில் தறி வைத்து பட்டு நெசவில் ஈடு பட்டு வரும் ஜெயலட்சுமி கூறு கையில், இது போல் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் சிறிய அள விலான தறி வைத்து பட்டு நெசவு செய்கிறோம். பெங்களுரு சேட்டு களிடமிருந்து நூல் வாங்கி வந்து பட்டுத் துணி நெசவு செய்து கொடுக்கிறோம். பகல் நேரத்தில் மின்சாரம் வரும் 2 மணி நேரம் மட்டும் வேலை செய்வதால் 30 ரூபாய்க்கும் குறைவாக வருமா னம் கிடைக்கிறது. இதை வைத்து குடும்பம் நடத்தவும் முடியாம மைக்ரோ பைனான்சுல பணம் வாங்கி அதையும் திருப்பிக் கொடுக்க முடியாம அவதிப்படு கிறோம் என்றார். பாகலூரில் 30 க்கும் மேற்பட்ட பட்டு நூல் நூற்பு நூல் முறுக்கேற் றும் தொழிற் கூடங்கள் உள்ளன. இந்த தொழிலை இதற்கு மேல் நடத்தவே முடியாது என்கிற அளவுக்கு உரிமையாளர்கள் மனக் குமுறலுடன் உள்ளனர். இவர்களி டம் பணியாற்றும் தொழிலாளர்க ளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. சம்பளமும் இல்லை கடன் தருவாரும் இல்லை என்கிற நிலையில் பட்டினியோடு பல பொழுதுகளை கடத்தி வருவதாக மஞ்சு தெரிவித்தார். ஏற்கனவே இத்தொழிலில் இருந்து வரும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் சிலர் மன நோயாளிகளாக மாறி விட்டதாக வும் ஜெயலட்சுமி குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கூறினார். தற்போதைய மின் வெட்டு பாகலூர் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை கவனத்தில் கொண்டு கூடுதல் நேரம் மின்சாரம் வழங்க வேண் டும் என்கிறார் மார்க்சி°ட் கம்யூ னி°ட் கட்சியின் ஓசூர் ஒன்றிய செயலாளர் எ°.வாசுதேவன். இக் கோரிக்கையுடன் மைக்ரோ பைனான்° கொடுமையிலிருந்து நெசவாளர்களை மீட்க பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார். – சி.முருகேசன்.

Leave A Reply

%d bloggers like this: