தேசிய ஊரக வேலைத்திட்ட ஊழல் தடுப்பில் மாநில அரசுக்கும் சம பொறுப்பு : ஜெய்ராம் பாட்னா, பிப். 16- தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் உத்தரப்பிரதேசத்தில் முறைகேடுகள் ஏற்பட்ட நிலையில், ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழலை தடுப்பதில் மாநில அரசுகளுக்கும் சம அளவில் பொறுப்பு உள்ளது என, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதுடன், மத்திய நிதிகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க தீவிர கண்கா ணிப்பு மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தில் சமூகத் தணிக்கை மற்றும் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை (சிஏஜி) மூலம் தீவிர கண்காணிப்பை கடைப்பிடிக்கலாம். இதன்மூலம் இந்தத்திட்டத்திலும் இந்திரா அவாஸ் யோஜனா (ஐஏஒய்) திட்டத்திலும் முறை கேடுகளை தடுக்கலாம் என்று பீகாருக்கு 2 நாள் பயணமாக வந்த ஜெய்ராம் ரமேஷ் பாட்னாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு ஆண்டு தோறும் ரூ.88 ஆயிரத்து 500 கோடி செலவு ஆகிறது. திட்டப்பணிகளை கண்காணிக்க சிஏஜியை தொடர்புபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் விடுத்த அறிக் கையில், பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளும் இதர முக்கிய நபர்களும் ஊரக வேலை மற்றும் இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு செய்து சொகுசு வாகனங்களை வாங்கியதாகக் குற்றம் சாட்டி இருந்தார். இதனை குறிப்பிட்ட ஜெய்ராம், இருதிட்டங்களின் ஊழல் முறைகேடுகளை, தடுப்பதற்கு மாநில அரசு களுக் கும் சம பொறுப்பு உள்ளது என்றார். மத்திய அரசின் திட் டங்களை செயல்படுத்துவதில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகியவை பின் தங்கி இருப்பது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: