தியாகிகள் ஜோதி-கொடிப் பயணம் சென்னை, பிப். 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை நோக்கி தியாகிகள் ஜோதிப்பயணங்கள் எழுச்சியுடன் துவங்க இருக்கின்றன. கோவை சின்னி யம்பாளையம் தியாகிகள் ஜோதிப்பய ணம், பிப்ரவரி 17 வெள்ளியன்று புறப் படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு வர்க் கப்போராட்டத்தின் எழுச்சி பூமியாம் நாகப்பட்டினத்தில் பிப்ரவரி 22 முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இம் மாநாட்டை நோக்கி கோவை சின்னியம் பாளையம் தியாகிகள், சேலம் சிறைத் தியாகிகள், வெண்மணி தியாகிகள் நினை வாக ஜோதிப்பயணக் குழுக்களும், கடந்த 19வது மாநில மாநாடு நிறைவு பெற்ற மதுரை மாநகரிலிருந்து தியாகி லீலா வதி நினைவாக செங்கொடி பயணமும் செல்கின்றன. கோவை சின்னியம்பாளையத்திலி ருந்து வெள்ளியன்று புறப்படும் தியாகி கள் ஜோதியை கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேலு எம்எல்ஏ எடுத்துக்கொடுக்கிறார். பயணக்குழு தலைவர்களும், கட்சியின் மாவட்ட தலைவர்கள் உள்பட திரளானோர் பங் கேற்கின்றனர். இக்குழு கோவை, திருப் பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் வழியாக நாகை மாநாட்டு அரங்கைச் சென்றடையும். சேலம் சிறைத் தியாகிகள் நினைவு ஜோதியை பிப்ரவரி 19ம் தேதி சேலம் சிறைச்சாலை பகுதியில் நடைபெறும் துவக்க நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப் பினர் என்.குணசேகரன் எடுத்துக்கொடுக் கிறார். இந்தப்பயணக்குழு சேலம், விழுப் புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக நாகை மாநாட்டு அரங்கைச் சென்றடையும். வெண்மணி தியாகிகள் ஜோதிப்பய ணம் பிப்ரவரி 21ம் தேதி காலை 11 மணியளவில் வெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து புறப்படுகிறது. தியாகிகள் ஜோதியை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வே.மீனாட்சி சுந்தரம் எடுத்துக்கொடுக்கிறார். மதுரையிலிருந்து தியாகி லீலாவதி நினைவு கொடிப்பயணம் பிப்ரவரி 18 சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டத்துடன் துவங்குகிறது. மாநாட்டில் ஏற்றப்பட வுள்ள செங்கொடியை மாநில செயற் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம் எல்ஏ, பயணக்குழுவிடம் எடுத்துக் கொடுக்கிறார். இக்குழு மதுரை புறநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் வழியாக நாகை மாநாட்டுஅரங்கைச் சென்றடையும். பயணக்குழுக்களை வரவேற்பதற் கான ஏற்பாடுகளை வழிநெடுகிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக் களும் இடைக்கமிட்டிகளும் கட்சி அணி களும் சிறப்பான முறையில் செய்திருக் கின்றன. பயணக்குழுக்களுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந் நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்டத்தலை வர்கள் பங்கேற்று உரைநிகழ்த்துகின்றனர். (பயணக்குழுக்கள் – முழு விபரம் பக்கம்-8)

Leave A Reply