தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கான தேசிய போட்டி மே 21ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் புதுச்சேரி, பிப். 16 – தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கான தேசிய விருது போட்டியில் கலந்து கொள்ள புதுச்சேரியி லுள்ள கலைஞர்கள் மே மாதம் 21ந் தேதி வரைக்கும் விண்ணப்பம் செய்யலாம் என்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கைவி னைப் பொருட்கள் அபிவி ருந்தி துறை சார்பில் ஒவ் வொரு ஆண்டும் தலை சிறந்த கைவினைக் கலைஞர் களுக்கான தேசிய விருது போட்டி நடத்தி அதன் மூலம் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் கைவினைக் கலை ஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தாமிரபத்திரம் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் அங்கவஸ்திரம் ஆகியன மற்றும் தேசிய மெரிட் சான்றிதழ் பெறுப வர்க்கு ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப் படுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் கைவினைக் கலைஞர்கள் தங்களது அரிய படைப்பை உரிய விண்ணப்பத்துடன் உதவி இயக்குநர் (கைவினைப் பொருட்கள்) கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையம், எண். 14, பொன் நகர் மெயின்ரோடு, ரெட்டி யார்பாளையம், பாண்டிச் சேரி – 605 010, (தொலை பேசி எண் : 0413 – 2206615) அல்லது மாவட்ட தொழில் மைய பொது மேலாளரி டம் 21.5.2012க்குள் நேரடி யாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் கைவி னைக் கலைஞர்கள் தமது அரிய படைப்பின் பணி மேற்கொள்ளும் சமயத்தில் உதவி இயக்குனர், கைவினைப் பொருட்கள் அபிவிருந்தி ஆணையர் அலு வலகம், எண். 14, பொன் நகர் மெயின்ரோடு, ரெட்டியார் பாளையம், பாண்டிச்சேரி – 605 010 என்ற விலாசத்தில் தெரிவித்தால் தங்கள் படைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து சான்று அளிக்க ஏதுவாக இருக்கும் மற்றும் தேவைப்பட்டால் தக்க ஆலோசனை வழங்கப் படும் என்று கைவினைப் பொருட்கள் உதவி இயக்கு நர் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: