சிரியாவில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெறும் பெய்ரூட், பிப். 16- சிரியாவில் பலகட்சி ஜன நாயகத்தை அனுமதிக்கும் புதிய அரசியல் சட்டம் குறித்து மக்கள் கருத்தறியும் வாக்கெ டுப்பை நடத்த ஜனாதிபதி பஷார் அசாத் உத்தரவிட்டுள் ளார். அதேவேளையில் கலகக் காரர்கள் மீது சிரியா ராணுவம் தாக்குதல்களை அதிகரித் துள்ளது. அசாத்தின் எதிரிகள் இந்த அறிவிப்பை வரவேற்கவில் லை. கடந்த 11 மாத காலமாக மக்கள் ரத்தம் சிந்தியுள்ளனர். அரசின் அடக்குமுறைக்கு ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எனவே வாக்கெடுப்பும் சீர்திருத்தமும் போதாது. அசாத் வெளியேற வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். தெருவில் போராடும் மக்க ளிடம் உள்ள பல கோரிக்கை களில் அசாத் வெளியேற வேண்டும் என்பதும் ஒன்று என்று ஜனநாயக மாற்றத்திற் கான தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் காலாப் தாவூத் கூறினார். சிரியாவிலும் தலைமறைவாகவும் வாழும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் குழு இது. இந்த வாக்கெடுப்பை அமெரிக்காவும் நிராகரித்துள் ளது. சிரியா ராணுவம் நடத்தி வரும் மிருகத்தனமான நடவடிக்கைகளின் மத்தியில் நகைப்பை உருவாக்கும் அம் சம் இது என்று செய்தித் தொடர்பு செயலாளர் ஜேய் கர்னி கூறுகிறார். மக்கள் எழுச்சியை நகைப்புக்குள் ளாக்கும் அறிவிப்பு என்றும் அவர் கூறினார். பிப்ரவரி 26 அன்று வாக்கெ டுப்பு நடைபெறும் என்று அசாத் தெரிவித்துள்ளார். சிரி யாவில் ராணுவத்திற்கும் எதிர்ப்பாளருக்கும் இடையில் பல பகுதிகளில் சண்டை நடைபெற்று வரும் வேளை யில், தேசம் தழுவிய வாக்கெ டுப்பு எவ்வாறு நடைபெற முடி யும் என்ற கேள்வியும் எழுகி றது. புதன்கிழமையன்று மட் டும் நாடு முழுவதும் எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர். அசாத்தின் அறிவிப்பு சிரி யா கலவரத்துக்கு ஒரு மாற்றுத் தீர்வை முன்வைக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.